worldcup 2023 | babar-azam | pakistan: பாகிஸ்தானின் முன்னணி செய்தி தொலைக்காட்சியாக ஆரி நியூஸ் (ARY News) சேனல் இருந்து வருகிறது. இதில் தொகுப்பாளராக இருந்து வசீம் பதாமி என்பவரும், அவரது செய்திக் ஒளிபரப்பு குழுவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) தலைமை இயக்குநர் சல்மான் நசீர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இடையேயான தனிப்பட்ட சேட்டிங் ஸ்கிரீன் ஷாட்டை நேரலையில் ஒளிபரப்பு செய்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தவறை ஒப்புக்கொண்ட வசீம் பதாமி சமூக வலைதளம் மூலமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாக வசீம் பதாமி வெளியிட்டுள்ள வீடியோவில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை இயக்குநர் சல்மான் நசீர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இடையேயான தனிப்பட்ட சேட்டிங் ஸ்கிரீன் ஷாட்டை நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒளிபரப்ப வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பி.சி.பி) தலைவர் ஜாகா அஷ்ரப்பின் வீடியோ செய்தி காரணமாக கடைசி நிமிடத்தில் ஒளிபரப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் நேரலை நிகழ்ச்சியைத் தயாரிக்கும்போது நிறைய விரைவான முடிவுகளை எடுக்க வேண்டும். அதில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இயற்கையாகவே, சில முடிவுகள் சரியானதாகவும், சில தவறானவையாகவும் இருக்கும். ஒரு குழுவாக, நாங்கள் ஒரு தவறான முடிவை எடுத்தோம். மூத்த பி.சி.பி அதிகாரியுடன் பாபரின் சேட்டிங்கை பகிர்ந்து கொண்டோம். சுருக்கமாகச் சொன்னால், நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து, நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நாங்கள் தனிப்பட்ட சேட்டிங்கை பகிரங்கப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்தோம்.
நிகழ்ச்சிக்கு சுமார் 5 முதல் 7 நிமிடங்களுக்கு முன்பு, பி.சி.பி தலைவர் ஜகா அஷ்ரஃப் கூறும் ஒரு கிளிப் கிடைத்தது. அதில், ‘இந்த ஸ்கிரீன் ஷாட்டை நான் உங்களுக்குத் தருகிறேன், அதைத் திரையில் நேரடியாகக் காண்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதை பகிர்ந்து கொள்ள அஷ்ரப் எங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளார். அதற்கு அவர் பொறுப்பு என்றார்.
அதனால் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தோம். ஆனால் அது சரியான முடிவு அல்ல. பாபர் அசாமின் சம்மதமும் முக்கியமானது என்பதை மறந்துவிட்டோம். எனது குழு மற்றும் நிர்வாகத்தின் சார்பாக இதைச் சொல்ல நான் விரும்புகிறேன். நாங்கள் அதைப் பற்றி பெருமைப்படுவதில்லை. இதுபோன்ற ஏதாவது நடந்தால், நீங்கள் அதிலிருந்து கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் அதையே மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்." என்று வசீம் பதாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருக்கிறார்.
My humble thoughts on Babar Azam - Zaka Ashraf issue 🙏🙏🙏 pic.twitter.com/g7RwamSP54
— Waseem Badami (@WaseemBadami) October 29, 2023
நேரலையில் வெளியான சேட்டிங்கில் இருந்தது என்ன?
வசீம் பதாமி ஆரி நியூஸ் நேரலை ஒளிபரப்பில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) தலைமை இயக்குநர் சல்மான் நசீர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இடையேயான தனிப்பட்ட சேட்டிங் ஸ்கிரீன் ஷாட் காட்டப்பட்டது. பாபர் அசாம் உலகக் கோப்பை போட்டிக்கு மத்தியில் பி.சி.பி தலைவருடன் பேசினாரா? அல்லது மெசேஜ் அனுப்பியாரா? என்று சல்மான் நசீர் கேட்கிறார் என பாகிஸ்தானின் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டும் இருந்தன.
“பாபர், நீங்கள் தலைவரை அழைக்கிறீர்கள் என்றும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. நீங்கள் அவரை சமீபத்தில் அழைத்தீர்களா? ” என்று சல்மான் நசீர் கேட்கிறார். அதற்கு பாபர் அசாம், "சலாம் (வாழ்த்துக்கள்) சல்மான் பாய்.நான் சாரை தொடர்பு கொண்டு பேசவில்லை" என்று பதிலளிக்கிறார்.
முன்னாள் பாக்., வீரர்கள் கடும் சாடல்
இந்த உரையாடல் செய்தி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், கேப்டன் பாபர் அசாம் தனிப்பட்ட விஷயத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடுமையாக சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பேசியுள்ள, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அசார் அலி, ஒருவரின் தனிப்பட்ட மெசேஜ்ஜை நேரடி தொலைக்காட்சியில் கசிந்திருக்கக்கூடாது என்று உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். இதேபோல், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் இந்த செயலுக்கு காரணமானவர்களை கடுமையாக சாடியுள்ளார்.
Ya kya Karna ki koshish kar raha ho aap loog??? This is pathetic !!!
— Waqar Younis (@waqyounis99) October 30, 2023
Khush ho gaya aap loog. Please leave @babarazam258 alone 🙏🏽. He’s an asset of Pakistan Cricket @TheRealPCB @ARYNEWSOFFICIAL @Salman_ARY https://t.co/pcM90yUGqy
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.