Babar Azam resigns | Pakistan | பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் தனது கேப்டன் பதவியை இன்று (நவ.15) ராஜினாமா செய்தார். உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோற்றத்தை தொடர்ந்து பாபர் ஆசம் தனது கேப்டன்ஷி பதவியை இழந்துள்ளார்.
இந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மோதிய 9 ஆட்டங்களில் 5-ல் தோல்வி அடைந்தது. இதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அதிர்ச்சி தோல்வியும் அடங்கும்.
இந்த நிலையில் பாபர் ஆசமிடம் இருந்து கேப்டன்ஷிப் பதவியை பறிக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள், உள்ளூர் நிர்வாகிகள் விமர்சித்தனர்.
இந்த நிலையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்” என பாபர் ஆசம் ட்விட்டர் எக்ஸ்ஸில் தனது ராஜினாமா கடிதத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், “பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து இன்று நான் விலகுகிறேன். இது ஒரு கடினமான முடிவு, ஆனால் இது சரியான நேரம் என்று நான் உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அனைத்து தரப்பு போட்டிகளிலும் தொடர்ந்து ஆடுவேன். பாகிஸ்தான் அணிக்கும் கேப்டனுக்கும் பலம் சேர்ப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாபர் ஆசம் 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 4 ஆண்டுகளில் தனது கடினமான உழைப்பின் மூலம் பாகிஸ்தான் அணியை முதலிடத்துக்கு கொண்டுவந்தார்.
இதற்கிடையில் இந்த உலக கோப்பை போட்டியில் அவரது ஆட்டமும், கேப்டன்ஷிப்பும் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டது. தனக்கு விருப்பமான வீரர்களை அவர் தேர்ந்தெடுத்தார்; இதற்கு தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் துணை புரிந்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது நினைவு கூரத்தககது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“