'கோலி, ரோஹித் பற்றி பயமில்லை… ஆனா அந்த 360 டிகிரி வீரர்தான்..!' பாகிஸ்தானை பயமுறுத்தும் இளம் இந்திய வீரர்

Babar Azam admits, SuryaKumar Yadav threat NO. 1 for Pakistan in IND vs PAK asia Cup Tamil News: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்திய அணியில் 360 டிகிரி கோணத்தில் பந்துகளை பறக்கவிடும் வீரர் தங்களை பயமுறுத்தும் வீராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Babar Azam admits, SuryaKumar Yadav threat NO. 1 for Pakistan in IND vs PAK asia Cup Tamil News: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்திய அணியில் 360 டிகிரி கோணத்தில் பந்துகளை பறக்கவிடும் வீரர் தங்களை பயமுறுத்தும் வீராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Babar Azam talks about SuryaKumar Yadav ahead of IND vs PAK, asia Cup Cricket 2022 Match

Pakistan skipper Babar Azam (pic credit ICC)

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், இன்று துபாயில் 7:30 மணிக்கு அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) பலப்பரீட்சை நடத்துகின்றன.

பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்தியா…

Advertisment

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்து இருந்தது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கேற்றார் போல் இந்திய அணியின் ஆடும் லெவனும் பலமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதுபோல், எதிராணியான பாகிஸ்தானும், மீண்டும் ஒரு வெற்றியை ருசிக்க ஆயத்தமாகி வருகிறது. மேலும், சமீபத்திய தொடர்களில் அந்த அணி நல்ல வெற்றி சராசரியை பதிவு செய்திருக்கிறது. அந்த உத்வேகத்துடனும் பாகிஸ்தான் அணி உள்ளது.

அச்சுறுத்தும் 360 டிகிரி வீரர்…

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்திய அணியில் 360 டிகிரி கோணத்தில் பந்துகளை பறக்கவிடும் வீரர் தங்களை பயமுறுத்தும் வீராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகிய மூவரும் சிறந்த வீரர்கள் தான். ஆனால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில், சூர்யகுமார் தான் அச்சுறுத்தல் கொடுப்பவராக இருக்கிறார். அவரை சமாளிப்பது சிரமம்.

சூர்யகுமார் யாதவ் ஒரு சிறந்த வீரர், பாகிஸ்தான் அணி மீட்டிங்கில் சூர்யகுமார் குறித்து தான் அதிகம் விவாதித்தோம். அவரை சமாளிப்பதற்காக வியூகங்களை அமைத்துள்ளோம் என்று பாபர் அசாம் கூறியுள்ளார்.

வித்த்தியாசமான ஷாட்களை அடிப்பவர் சூர்யகுமார் - வாசீம் அக்ரம்

Advertisment
Advertisements

இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ், இதுவரை 23 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 672 ரன்களை அடித்துள்ளார். இதில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். கடைசியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் 65 ரன்களை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசீம் அக்ரம் சமீபத்தில் பேசிய ஒரு உரையாடலில், " சூர்யகுமாரின் ஷாட்கள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். அதுவும் ஃபைன் லெக் திசையில் அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Cricket Sports Babar Azam Suryakumar Yadav India Vs Pakistan Indian Cricket Team

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: