Babar azam – Mohammad Rizwan duo world record in PAK vs ENG Tamil News: பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவதாக டி-20 தொடர் நடந்து வரும் நிலையில், கடந்த 20 ஆம் தேதி நடந்த முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டி-20 போட்டி நேற்றிரவு நடந்தது.
பரபரப்புக்கு பஞ்சமில்லமால் அரங்கேறி இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மொயின் அலி அரைசதம் விளாசி 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார். 7 பவுண்டரிகளை விரட்டிய டக்கெட் 43 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக தஹானி மற்றும் ஹாரிஸ் ராவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது நவாஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, 200 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறனர். தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்த இந்த ஜோடியில் பாபர் அசாமும், ரிஸ்வானும் தங்களது அரை சதத்தை பதிவு செய்தனர்.

தொடர்ந்து அதிரடிகாட்டிய இந்த ஜோடியில் கேப்டன் பாபர் அசாம் 62 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மேலும், எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி, அந்த அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் பாபர் அசாம் 110 (66) ரன்களும், முகமது ரிஸ்வான் 88 (51) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் 19.3 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தொடரில் 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து , பாகிஸ்தான் அணிகள் சமநிலையில் உள்ளன.
A record chase in Karachi 🤩
— Pakistan Cricket (@TheRealPCB) September 23, 2022
📽️ Catch all the BTS from Pakistan's 10-wicket win over England last night 🏏#PAKvENG | #UKSePK pic.twitter.com/dwQadH0nAK
ரோகித்- தவான் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் ஜோடி…
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் தொடக்க ஜோடி விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்த ஜோடி, இந்தியாவின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி டி20களில் (1743) அதிக பார்ட்னர்ஷிப் ரன்களுக்கான சாதனையைப் படைத்ததுள்ள நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 203 ரன்கள் எடுத்ததன் மூலம் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் அவர்களை முந்திச் சென்றுள்ளனர்.
Utter domination 💪
— ICC (@ICC) September 22, 2022
Pakistan bounce back in the T20I series with a comprehensive 10-wicket win over England.#PAKvENG | 📝Scorecard: https://t.co/WHBPS7jrZE pic.twitter.com/2eNgGw4Q6J
Only three times has a target over 150 been chased in T20Is without losing a wicket.
— Pakistan Cricket (@TheRealPCB) September 22, 2022
Pakistan have done it twice 🙌#PAKvENG | #UKSePK pic.twitter.com/mV7YGMPggW
சர்வதேச டி20-யில் தொடக்க ஜோடியாக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியல்:
பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – 1929
ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் (இந்தியா) – 1743
கெவின் ஓ பிரையன் மற்றும் பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து) – 1720
கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா (இந்தியா) – 1660
கைல் கோட்சர் மற்றும் ஜார்ஜ் முன்சி (ஸ்காட்லாந்து) – 1577.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil