/tamil-ie/media/media_files/uploads/2018/09/d342.jpg)
Saina Nehwal Marrying Long Time Boyfriend Parupalli Kashyap
Badminton Stars Saina Nehwal, Parupalli Kashpap to Tie Knot on Dec 16: சாய்னா நேவால் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இரு கொண்டாட்டமான நிகழ்வுகள் அரங்கேறியிருக்கிறது.
ஒன்று.. இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட சாய்னா நேவாலின் பயோபிக் திரைப்படம். பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரீஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு `சாய்னா' என்றே பெயரிடப்பட்டுள்ளது. சாய்னா நேவாலாக பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். அமோல் குப்தே என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில், சக பேட்மிண்டன் வீரரும், சொந்த மாநிலத்துக்காரருமான பருபள்ளி கஷ்யப்பை சாய்னா திருமணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்தில் 100 பேர் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். மற்ற நண்பர்கள், செலிப்ரிட்டிகளுக்காக டிசம்பர் 21ம் தேதி பிரம்மாண்டமாக ரிஷப்ஷன் வைக்க உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், இருவரும் 10 ஆண்டுகளாக சைலன்ட்டாக லவ்ஸ் பண்ணிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். இப்போது பெற்றோர்களின் பரிபூரண சம்மதத்துடன் இருவரின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.