Subramaniam Badrinath Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் பத்ரிநாத். தற்போது "கிரிக்ஐடி வென்ச்சர்ஸ்" என்கிற நிறுவனத்தை நடத்தில் வரும் இவர் ஆன்லைன் மூலம் தமிழக இளம் வீரர்களின் திறமையை கண்டறிந்து இலவசமாக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனியார் செய்தி இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “இன்று நீங்கள் உங்கள் மொபைல் போன் துணையுடன் உலகை அணுக முடிகிறது. கிரிக்கெட் விளையாட்டிலும் தொழில்நுட்பம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இத்தகைய சூழலில் தொழில்நுட்பத்தின் ஊடாக திறன் படைத்த கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண உள்ளேன். அவர்களுக்கு பயிற்சி கொடுக்க உள்ளேன். நான் இதனை எனது சொந்த செலவில் முன்னெடுத்துள்ளேன். இது வணிகம் சார்ந்த முயற்சி அல்ல. நம் மாநில கிரிக்கெட்டுக்கு என்னால் முடிந்ததை செய்ய விரும்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்
பத்ரிநாத், இதற்கான பணிகளை அவரது ‘CricIT Venture’ மூலம் மேற்கொண்டு வரும் நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர்கள் தங்களது திறனை மொபைல் போனில் வீடியோவாக படம் பிடித்து அதனை www.cricitventures.com என்ற தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், பேட்டிங், பவுலிங் என எது வேண்டுமானாலும் அந்த வீடியோவில் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோக்களில் திறன் படைத்த வீரர்களை அடையாளம் கண்டு, இலவச அதிநவீன பயிற்சி சென்னையில் பத்ரிநாத் வழங்க உள்ளார். மாவட்டங்களில் இருந்து வரும் வீரர்களுக்கு இலவசமாக உணவு மற்றும் தங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஃபிரான்சைஸ் பயிற்சியாளராக இருந்தபோது இந்தத் திட்டத்தைப் பற்றி யோசித்ததாக தெரிவித்துள்ள பத்ரிநாத், "எதிர்காலத்தில், ஸ்பான்சர்கள் வரவேற்கப்படுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் இதை முன்னோக்கி எடுத்துச் சென்றால், நாங்கள் அதை ஒரு பெரிய முயற்சியாக மாற்ற முடியும். கடந்த இரண்டு வாரத்தில் சுமார் 1500-க்கும் கூடுதலான வீடியோ வந்துள்ளன." என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.