Advertisment

Bangladesh vs Afghanistan Live Score: புலிக்குட்டியை வீழ்த்துமா ஆப்கன்? வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் போட்டி லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

World Cup 2019, Bangladesh vs Afghanistan Match Live Score Updates: வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BAN vs AFG Live Score, Bangladesh vs Afghanistan World Cup Live Score

BAN vs AFG Live Score, Bangladesh vs Afghanistan World Cup Live Score

Afghanistan vs Bangladesh World Cup 2019 Live Score: உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில், இன்று(ஜூன்.24) சவுத்தாம்ப்டன் நகரின் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில், குல்பாதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், மஷ்ரஃபே மோர்டசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதுகின்றன.

ஆறு போட்டிகளில் விளையாடி, ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்திருக்கும் ஆப்கானிஸ்தான், ஏற்கனவே உலகக் கோப்பையை விட்டு வெளியேறிவிட்டது. ஆகையால், அவர்களுக்கு இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. அதேசமயம், ஆறு போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேசம், 2 வெற்றியும், 3 தோல்வியும் பெற்று, புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. அரையிறுதிக்கான ரேஸிலும் நீடிக்கிறது. தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி, அபார ஃபார்மில் உள்ளது அந்த அணி.

ஆப்கன் - வங்கதேசம் போட்டி இந்தியா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை நேரடியாக காணலாம். ஆன்லைனில் ஹாட்ஸ்டாரில் போட்டியை ரசிக்கலாம். தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தல் லைவ்  ஸ்கோர் கார்டை நேயர்கள் கண்டுகளிக்கலாம்.

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment