scorecardresearch

BAN vs AFG: சிக்சர் மழை பொழிந்த நஜிபுல்லா; வங்கதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Bangladesh vs Afghanistan, 3rd Match, Group B – Weather Forecast And Pitch Report of Sharjah Cricket Stadium in UAE- Asia Cup 2022 Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் (பி பிரிவு) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

BAN vs AFG: Pitch Report, predicted 11 - Asia Cup 2022, Match 3
Bangladesh vs Afghanistan – Sharjah Cricket Stadium in UAE Tamil News

BAN vs AFG: Match Updates Asia Cup 2022 Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் (டி-20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜா மைதானங்களில் நடந்து வருகிறது. இதில், 6 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் “4” சுற்றுக்கு முன்னேறும்.

வங்க தேசம் – ஆப்கான் அணிகள் மோதல்

இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன.

வங்க தேச அணியை ஆல்-ரவுண்டர் வீரர் ஷகிப் அல்-ஹசன் வழிநடத்துகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு டி20 அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கும் அவருக்கு இது 100-வது 20 ஓவர் சர்வதேச போட்டியாகும். எனவே, தனது மைல்கல் ஆட்டத்தில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

அந்த அணியைப் பொறுத்தவரை, சமீபத்திய சர்வதேச தொடர்களில் சறுக்கலை சந்தித்து வருகிறது. அந்த அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்றது. இந்தத் தொடரில் விளையாடாத ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதேபோல் சபிர் ரகுமான், முகமது நைம் ஆகியோரும் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த முன்னணி வீரர்களின் வருகை அந்த அணிக்கு சம பலத்தை கொடுத்துள்ளது.

மறுபுறம், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அதன் தொடக்க லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அபார வெற்றியை ருசித்து. 105 ரன்னுக்குள் இலங்கையை சுருட்டிய அந்த அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து மிரட்டியது. ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், முகமது நபியும், பந்து வீச்சில் பாசல்ஹக் பரூக்கி, முஜீப் ரகுமான், ரஷித் கானும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

தொடக்க லீக் ஆட்டத்தில் வெற்றியை சுவைத்த ஆப்கானிஸ்தான் அணி, இன்றைய ஆட்டத்தில் அதே உத்வேகத்துடன் நுழையும். மேலும், இந்த ஆட்டத்தை வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைய தீவிரம் காட்டும். அதேவேளையில், போட்டியை வெற்றியுடன் தொடங்கவே வங்காளதேச அணி முயலும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

நேருக்கு நேர்

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை 8 டி-20 சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் 5 ஆட்டத்திலும், வங்காளதேசம் 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

சார்ஜா மைதானம் எப்படி?

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் நடக்கும் சார்ஜா மைதானம் சற்று சிறியதாகும். ஆனால், அங்கு தற்போது நிலவும் கடுமையாக வெப்பத்தின் தாக்கம் காரணமாக ரன்கள் சேர்ப்பது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சவாலாக இருக்கும். இந்த ஆடுகளம் சுழலுக்கு அதிகம் ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதால், சுழற்பந்து வீச்சாளர்கள் மிரட்ட அதிகம் வாய்ப்புள்ளது. தவிர, இரு அணியிலும் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இரு அணி வீரர்கள் பட்டியல்:

வங்காளதேச அணி:

முகமது நைம், அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன்(கேப்டன்), அபிஃப் ஹொசைன், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, சபீர் ரஹ்மான், மஹேதி ஹசன், முகமது சைபுதீன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், மொசாதிக் ஹொஸ்ஸீன், மொசாதிக் ஹொசான் மிராஸ், எபடோட் ஹொசைன், பர்வேஸ் ஹொசைன் எமன்

ஆப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா சத்ரான், கரீம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், அஸ்மதுல்லா உமர்சாய், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹுல்லா ஷிக்வாக்மான் ஷாஹிதி, அஃப்சர் ஜசாய், ஃபரீத் அகமது மாலிக், உஸ்மான் கானி, நூர் அகமது

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இரு அணி சார்பில் விளையாளடும் 11 வீரர்களின் பட்டியல்

ஆப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லாஹ் சத்ரான், கரீம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், அஸ்மதுல்லா உமர்சாய், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபார்

வங்காளதேச அணி:

முகமது நைம், அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), அபிஃப் ஹொசைன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மொசடெக் ஹூசைன், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், முகமது சைபுதீன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

வங்கதேசம் பேட்டிங்

வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது நைம் மற்றும் அனாமுல் ஹக் களம் இறங்கினர். தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினர். இதனால் தடுமாறிய வங்கதேச தொடக்க வீரர் முகமது நைம் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ரன் குவிக்க முடியாமல் தடுமாறிய அனாமல் ஹக் 14 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த ஷகீப் அல் ஹசன் 2 பவுண்டரிகள் விளாசியதோடு, 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் 3 பேரின் விக்கெட்டையும் முஜீப் வீழ்த்தினார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹீம் 1 ரன்னில் அவுட் ஆக, வங்கதேச 4 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அடுத்து ஜோடி சேர்ந்த ஹூசைன் மற்றும் மகமதுல்லா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் சிறிது நேரத்தில் ஹூசைன் 12 ரன்களில் அவுட் ஆனார். ரஹீம் மற்றும் ஹூசைனை ரஷித் கான் எல்.பி.டபுள்யூ ஆக்கினார். அடுத்துவந்த ஹசன் கம்பெனி கொடுக்க மகமதுல்லா அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினார். மகமதுல்லா 31 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்தில் அவுட் ஆனார். தொடர்ந்து ஆடிய ஹசன் 14 ரன்களில் ரன் அவுட் ஆக வங்கதேச அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் மற்றும் ரஷித் கான் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் பேட்டிங்

ஆப்கானிஸ்தான் அணியில் ஹசரத்துல்லா மற்றும் குர்பாஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். குருபாஸ் 11 ரன்களில் ஷகிப் பந்தில் அவுட் ஆனார். சிறிது நேரம் நிதானமாக ஆடிய ஹசரதுல்லா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இப்ராகிம் சத்ரன் அருமையாக ஆடி ரன் சேர்த்தார். மறுமுனையில் ஆடிய நபி 8 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் இப்ராகிமுடன் சேர்ந்த நஜிபுல்லா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் அற்புதமாக ஆடி ரன் குவித்தனர். அதிலும் நஜிபுல்லா 6 சிக்சர்களை விளாசி அசத்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 18.3 ஓவர்களிலே இலக்கை எட்டி, வெற்றி பெற்றது.

இப்ராகிம் மற்றும் நஜிபுல்லா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இப்ராகிம் 41 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார். நஜிபுல்லா 17 பந்தில் 43 ரன்கள் குவித்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும். வங்க தேச அணி தரப்பில் ஷகிப், ஹூசைன் மற்றும் முகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Asia Cup, 2022Sharjah Cricket Stadium, Sharjah   27 March 2023

Bangladesh 127/7 (20.0)

vs

Afghanistan   131/3 (18.3)

Match Ended ( Day – Match 3 ) Afghanistan beat Bangladesh by 7 wickets

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ban vs afg pitch report predicted 11 asia cup 2022 match 3