Advertisment

பாகிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்... அந்நிய மண்ணில் வரலாறு படைத்து மிரட்டல்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது வங்கதேசம். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வங்கதேச வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Bangladesh create history in Rawalpindi, record maiden Test win over Pakistan Tamil News

ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்று வரலாறு படைத்தது

பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. மழை பாதிப்பு காரணமாக ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தான் ஆரம்பமானது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: angladesh create history in Rawalpindi, record maiden Test win over Pakistan

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171 ரன்களும், சவுத் ஷகீல் 141 ரன்களும் எடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி வங்கதேச அணி 565 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆகியது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 191 ரன்களும், ஷத்மான் இஸ்லாம் 93 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து, 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னில் சுருண்டது. அபாரமாக பந்துவீசிய வங்கதேச அணியின் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டையும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். 

இதனையடுத்து, 29 ரன்கள் மட்டுமே கொண்ட எளிய வெற்றி இலக்கை துரத்திய வங்கதேசம், விக்கெட் இழப்பின்றி 6.3 வது ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது. இதையடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது வங்கதேசம். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வங்கதேச வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. 

வரலாறு படைத்த வங்கதேசம் 

இந்த வெற்றியானது 14 முயற்சிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை வங்கதேசம் பெற்றுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் நடந்த போட்டிகளில் அவர்கள் இதற்கு முன்பு 12 போட்டிகளில் தோல்வியடைந்து தனித்து சமநிலையில் இருந்தனர். வங்கதேசம் சந்தித்த 11-டெஸ்ட் விளையாடும் அணிகளில் ஒன்பது அணிகளை இப்போது தோற்கடித்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்னும் வெற்றியை பதிவு செய்யவில்லை.

இந்த வெற்றியானது 143 போட்டிகளில் வங்கதேசத்தின் 20வது டெஸ்ட் வெற்றியாகவும், அந்நிய மண்ணில் ஏழாவது டெஸ்ட் வெற்றியாகவும் அமைந்தது. இதற்கு முன்பு கரீபியன் மற்றும் ஜிம்பாப்வேயில் இலங்கை மற்றும் நியூசிலாந்தில் வங்கதேசம் தனித்து வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம், ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ​​புள்ளிகள் அட்டவணையில் பாகிஸ்தானை கடந்த ஐந்து ஆட்டங்களில் இந்த சுழற்சியில் இரண்டாவது வெற்றியைப் பெற்றனர். இந்தச் சுழற்சியில் ஆறு ஆட்டங்களில் நான்காவது தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் எட்டாவது இடத்திற்குச் சரிந்தது, அதன் புள்ளிகள் சதவீதத்தை (PCT) 30.55 ஆகக் குறைத்தது.

இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்குகிறது.

வங்கதேசம் அந்நிய மண்ணில் டெஸ்ட் வெற்றி

9 ஜூலை 2009: கிங்ஸ்டவுன் - 95 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வங்கதேசம் வென்றது

17 ஜூலை 2009: செயின்ட் ஜார்ஜ்- வெஸ்ட் இண்டீசை 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது

25 ஏப்ரல் 2013: ஹராரே - ஜிம்பாப்வேயை 143 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது

15 மார்ச் 2017: கொழும்பு - இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம்  வீழ்த்தியது

7 ஜூலை 2021:  ஹராரே - ஜிம்பாப்வேயை 220 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது

1 ஜனவரி 2022:  மவுண்ட் மவுங்கானுய் - நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம்  வென்றது

25 ஆகஸ்ட் 2024: ராவல்பிண்டி - பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தியது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pakistan vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment