/tamil-ie/media/media_files/uploads/2018/09/d287.jpg)
Bangladesh vs Afghanistan Live Cricket Score
Bangladesh vs Afghanistan Cricket Score: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் மஷ்ரபே மோர்டசா தலைமையிலான வங்கதேசம் அணியும், அஷ்கர் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும், ஏற்கனவே அடுத்த சுற்றான சூப்பர் 4க்கு முன்னேறிவிட்டன. அதே பிரிவில் இடம் பெற்றிருந்த இலங்கை, 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்விரு அணிகளும் இதுவரை ஐந்து முறை போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 2 முறை ஆப்கனும், 3 முறை வங்கமும் வென்றுள்ளது. கடைசியாக கடந்த 2016ல் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில், வங்கதேசம் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தது.
BAN XI: L Das, M Haque, S Al Hasan, M Mithun, Mahmudullah, Mosaddek Hossain, M Hasan, M Mortaza, R Hossain, NH Shanto, Abu Hider
— ICC Live Scores (@ICCLive) September 20, 2018
ஆசிய கோப்பையை பொறுத்தவரை, 2013-14ல் நடந்த தொடரில் ஆப்கானிஸ்தான் 32 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தானை பழி தீர்க்கும் எண்ணத்துடன் வங்கதேசம் களமிறங்கவுள்ளது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் அஷ்கர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நீங்கள் இங்கே காணலாம். இந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!
மேலும் படிக்க - வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் போட்டியை எங்கு காணலாம்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us