Advertisment

Bangladesh vs Afghanistan Live, Asia Cup 2023: வங்கதேசத்தின் இமாலய இலக்கை எட்ட முடியாமல் ஆப்கானிஸ்தான் தோல்வி!

வங்கதேசம் நிர்ணயித்த 335 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி நிதானமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் வங்கதேச அணி 89 ரன்களில் வெற்றி பெற்றது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bangladesh vs Afghanistan Live Score, Asia Cup 2023

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2023: ஆப்கானிஸ்தான் – வங்கதேசம் இன்று மோதல்

Asia Cup 2023 Live Score, BAN vs AFG Match Today Tamil News: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கியது. பாகிஸ்தானின் லாகூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

Advertisment

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

வங்கதேசம்

முகமது நைம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத்.

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, முஜீப் உர்ரஹ்மான்

லாகூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் 4-வது லீக் ஆட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் வங்காளதேச அணி சிறப்பாக விளையாடியது . அந்த அணியின் மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன் இருவரும் இணைந்து பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர் . தொடர்ந்து அதிரடி காட்டிய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

இதனால் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது. மெஹிதி ஹசன் 112 ரன்களும் , நஜ்முல் ஹொசைன் 104 ரன்களும் எடுத்தனர். இதனை தொடர்ந்து 335 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி வெற்றி இலக்கை நோக்கி நிதானமாக விளையாடியது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் வங்கதேச அணி 89 ரன்களில் வெற்றி பெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்பெற https://t.me/ietamil

Sports Cricket Afghanistan Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment