/tamil-ie/media/media_files/uploads/2018/09/d241.jpg)
Bangladesh vs Sri Lanka Asia Cup 2018 Live Score
Bangladesh vs Sri Lanka Asia Cup 2018 Live Score : 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. மூன்றாவது முறையாக அங்கு நடக்கும் ஆசிய தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 18ம் தேதி தனது முதல் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.
இதில் இரு பிரிவுகள் உள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும் உள்ளன.
இந்நிலையில், இன்று துபாயில் தொடங்கிய முதல் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணியும், மோர்டசா தலைமையிலான வங்கதேசம் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மோர்டசா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. நல்ல வெயில் அடிப்பதால், முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிகம் ரன்கள் சேர்க்க வாய்ப்பு உள்ளது. தொடக்கத்தில் பிட்சில் டர்ன் பெரிதாக இருக்காது. ஆனால், நேரம் செல்ல செல்ல பனி பொழியும். பந்துகள் அப்போது டர்ன் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.