Advertisment

வாத்தாக மாறிய கோலி, ரூட், ஸ்டோக்ஸ்... இங்கி., ரசிகர்களுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி!

விராட் கோலி டக் அவுட் ஆன நிலையில், அவரை வாத்தாக சித்தரித்து இங்கிலாந்து ரசிகர்கள் மீம்ஸ் போட்டனர். இதனைப் பார்த்து பொங்கி எழுந்த இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Barmy Army TROLLS Virat Kohli and Bharat Army reply  VIRAL Duck Meme IND v ENG CWC 2023

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர்களின் "பார்மி ஆர்மி" (Barmy Army) சமூக வலைதள பக்கத்தில் விராட் கோலியை வாத்தாக சித்தரித்து மீம்ஸ் போட்டனர்.

worldcup 2023 | india-vs-england | memes: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியானான இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. 

Advertisment

இந்த போட்டியின் போது இந்தியா - இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மோதிக்கொண்டது சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் விராட் கோலி டக் அவுட் ஆன நிலையில் அவரை வாத்தாக சித்தரித்து இங்கிலாந்து ரசிகர்கள் மீம்ஸ் போட்டனர். இதனைப் பார்த்து பொங்கி எழுந்த இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். 

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கில்  9 ரன்னுக்கு ஆட்டமிழக்கவே நட்சத்திர வீரரான விராட் கோலி களமிறங்கினார். 6வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்த அவர் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 9 பந்துகளை எதிர்கொண்ட கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். 

இதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர்களின் "பார்மி ஆர்மி" (Barmy Army) சமூக வலைதள பக்கத்தில் விராட் கோலியை வாத்தாக சித்தரித்து மீம்ஸ் போட்டனர். அதில், 'நாங்கள் இன்று நடந்து சென்ற போது கண்ட காட்சி' என பதிவிட்டு, அந்த மீம்ஸில் கோலி ஒரு வாத்தாக ஒரு குளத்தில் இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றது.

இதனைப் பார்த்த இந்திய ரசிகர்கள் உலகக்கோப்பை லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் போதே 'இந்த பேச்சா' என்று கலாய்த்தனர். அதில் ஒரு மீம்ஸில், "இங்கிலாந்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் கீழே இருந்து பார்க்கும் போது" என்று பதிவிட்டனர். 

தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 230 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை இங்கிலாந்து துரத்தும் போது இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். மற்றொரு நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் 10 பந்துகளை சந்தித்து ஒரு பந்தை கூட அடிக்க முடியாமல் டக் அவுட் ஆனார். உடனே இந்திய ரசிகர்கள், "நாங்கள் இன்னும் கொஞ்ச தூரம் நடந்து சென்றோம். அப்போது இந்த காட்சியை கண்டோம்" என பதிவிட்டு பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட்டை இரண்டு வாத்துகளாக சித்தரித்து மீம்ஸ் வெளியிட்டு பதிலடி கொடுத்தனர். இந்த மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England Worldcup Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment