Advertisment

ரூ.1 கோடி சம்பளம்… தேர்வுக் குழுவின் தலைவராகிறார் அஜித் அகர்கர்!

முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கர் பி.சி.சி.ஐ-யின் மூத்த தேர்வுக் குழுவின் தலைவராக பதவியேற்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
BCCI Ajit Agarkar chief selector Tamil News

மும்பையைச் சேர்ந்த முன்னாள் கேப்டன் அஜித் அகர்கர் இந்தியாவுக்காக 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Ajit Agarkar  - BCCI Tamil News: இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா, பிப்ரவரியில் ஸ்டிங் ஆபரேஷன் காரணமாக அப்பதவியில் இருந்து விலகினார். இதனால், 5 பேர் கொண்ட குழுவில் ஒரு இடம் கடந்த பிப்ரவரியில் முதல் காலியாக உள்ளது. கமிட்டியின் தற்போதைய உறுப்பினர்கள் சுப்ரோதோ பானர்ஜி, சலில் அன்கோலா, ஸ்ரீதரன் ஷரத் மற்றும் ஷிவ் சுந்தர் தாஸ் ஆகியோர், முன்னாள் தலைவர் சேத்தன் ஷர்மா ராஜினாமா செய்த பின்னர் இடைக்காலத் தலைவராக செயல்படுகின்றனர்.

Advertisment

இந்நிலையில், புதிய தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தீவிரப்படுத்தியது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பு தேர்வுக் குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்து, தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கர் பி.சி.சி.ஐ-யின் மூத்த தேர்வுக் குழுவின் தலைவராக பதவியேற்க உள்ளார். அவரை தொடர்பு கொண்ட பிசிசிஐ அதிகாரிகள், தலைமை தேர்வாளரின் ஆண்டு சம்பளத்தை தற்போது ரூ.1 கோடியாக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளனர். அதனால், அஜித் அகர்கர் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளார்.

விண்ணப்பதாரர்களின் பட்டியலில் அஜித் அகர்கர் மட்டுமே முன்னணி வீரராக இருக்கிறார். ஐபிஎல் அணியின் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் பதவியில் இருந்த அவர் நேற்று வியாழக்கிழமை ராஜினாமா செய்தார். சுவாரஸ்யமாக, 2020 ஆம் ஆண்டில், அகர்கர் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தபோது பிசிசிஐ அவரை தேர்வு செய்யவில்லை.

தேர்வுக் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.90 லட்சம் வழங்கப்படுகிறது. தலைமை தேர்வாளரின் வருடாந்திர சம்பளத்தை திருத்த பிசிசிஐ முடிவு செய்ய காரணமாக, அவர்கள் வர்ணனை மற்றும் ஸ்டுடியோவில் நேரலையில் கருத்து தெரிவிப்பதன் மூலம் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்று பிசிசிஐ குறிப்பிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த முன்னாள் கேப்டன் அஜித் அகர்கர் இந்தியாவுக்காக 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007ல் டி20 உலகக் கோப்பை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியில் அஜித் அகர்கர் இடம் பிடித்து இருந்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Ajith Sports Cricket Indian Cricket Team Indian Cricket Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment