scorecardresearch

ரிச்சா கோஷ், ஜெமிமா-வுக்கு ப்ரோமோஷன்; இந்திய வீராங்கனைகள் ஊதிய ஒப்பந்தம் வெளியீடு

கடந்த ஆண்டு கிரேட் பி-யில் இடம்பெற்றிருந்த தீப்தி ஷர்மா இந்த முறை கிரேட் ஏ-விற்கு முன்னேறியுள்ளார்.

BCCI announces annual contracts for Indian women cricketers Tamil News
BCCI announces annual contracts for Indian women cricketers Tamil News

BCCI announces annual contracts for Indian women cricketers  Tamil News: 2022-2023-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. அதன்படி, வீராங்கனைகள் கிரேட் ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுபட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு 19 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 2 பேர் குறைக்கப்பட்டு 17 வீராங்கனைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

கிரேட் ஏ பிரிவு தான் அதிகபட்சமாக ரூ.50 லட்சத்தை ஊதியமாக கொண்ட பிரிவு. கிரேட் பி பிரிவில் இடம்பெறும் வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சமும், கிரேட் சி பிரிவில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும்.

இந்த ஆண்டு கிரேட் ஏ பிரிவில் 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா ஆகியோருடன் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு கிரேட் பி-யில் இடம்பெற்றிருந்த தீப்தி ஷர்மா இந்த முறை கிரேட் ஏ-விற்கு முன்னேறியுள்ளார். கடந்த முறை கிரேட் ஏ-வில் இடம்பெற்றிருந்த பூனம் யாதவ், இந்த முறை ஒப்பந்த பட்டியலிலேயே இல்லை.

சுழற்பந்து வீச்சு வீராங்கனை ராஜேஸ்வரி கயக்வாட் பி பிரிவிற்கு தள்ளப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் ஆச்சரியமான மறுபிரவேசம் செய்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே இந்த முறை ஒப்பந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. அதே போல் விக்கெட் கீப்பர் டானியா பாட்டியாவுக்கும் இடம் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இல்லாத வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா தாக்கூர், சிறப்பான சீசனுக்குப் பிறகு நேராக பி பிரிவுக்கு முன்னேறியுள்ளார்.

ரிச்சா கோஷ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சி பிரிவில் இருந்து பி பிரிவுக்கு முன்னேறியுள்ளனர். சி பிரிவில் வேகப்பந்து வீச்சாளர் மேக்னா சிங், பேட்டர் தேவிகா வைத்யா, தொடக்க வீராங்கனை எஸ்.மேகனா, ராதா யாதவ், இடது கை வேகப்பந்து வீச்சாளர் அஞ்சலி சர்வானி மற்றும் பேட்டர் யாஸ்திகா பாட்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஹர்லீன் தியோல் மற்றும் சினே ராணா ஆகியோர் அதே பிரிவில் உள்ளனர், காயத்தால் பாதிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் பூஜா வஸ்த்ரகர் பி பிரிவில் இருருந்து சி பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கிரேட் ஏ: ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா

கிரேட் பி: ரேணுகா தாகூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வெர்மா, ரிச்சா கோஷ், ராஜேஷ்வரி கெய்க்வாட்.

கிரேட் சி: மேகனா சிங், தேவிகா வைத்யா, சபினேனி மேகனா, அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்ட்ராகர், ஸ்னே ராணா, ராதா யாதவ், ஹர்லீன் தியோல், யஸ்டிகா பாட்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Bcci announces annual contracts for indian women cricketers tamil news

Best of Express