Indian Cricket Team | Bcci | India Vs England: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில் இன்று நிறைவடைந்த தரம்சாலா டெஸ்ட் போட்டி உட்பட 4 போட்டிகளில் வென்று 4-1 என்கிற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில், இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி, ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட கட்டமைப்பின்படி, 2022-23 முதல் ஒரு சீசனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான டெஸ்டில் ஆடும் 11-இல் இடம்பெற்றுள்ள வீரர்கள், ஒரு ஆட்டத்திற்கு அவர்களின் போட்டிக் கட்டணத்தை இரட்டிப்பாக்க ஊக்கத்தொகை வழங்கும் பி.சி.சி.ஐ திட்டத்திற்கு ரூ. 40 கோடி ஒதுக்கியுள்ளது.
செயலாளர் ஜெய்ஷா வழங்கிய அட்டவணையின்படி, ஒன்பது போட்டிகள் கொண்ட சீசனில் 5-6 முதல் ஆறு டெஸ்ட் வரை விளையாடும் ஒரு வீரர், ஒரு போட்டிக்கு வழக்கமான 15 லட்சத்திற்கு மாறாக ஒரு போட்டிக்கு ரூ. 30 லட்சம் பெறுவார். ஒரு சுழற்சியில் குறைந்தது 75 சதவீத போட்டிகளில் ஆடும் ஒவ்வொரு வீரருக்கும் சம்பளம் ஒரு போட்டிக்கு 22.5 லட்சத்திலிருந்து 45 லட்சமாக இரட்டிப்பாகும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு தெரிவித்தது போல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட அணி நிர்வாகத்தின் அழைப்புகளை புறக்கணித்துவிட்டு, அதற்கு பதிலாக ஐ.பி.எல்லுக்கு தயாராகிவிட்டதால் சம்பள கட்டமைப்பை மாற்றியமைக்க பி.சி.சி.ஐ முடிவு செய்ததாக அறியப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“