BCCI Contracts 2022-23 Tamil News: 2022-23 ஆம் ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசி) விரைவில் வெளியிட உள்ளது. இதில், இந்திய டி20 அணியில் முன்னணி வீரராக வலம் வரும் ஹர்திக் பாண்டியா, மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல், ஆல்-ரவுண்டர் வீரர்களான அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை, அவருக்கு இரட்டை பதவி உயர்வு கிடைக்கும். ஆல்ரவுண்டராக கலக்கி வரும் ஹர்திக்கிற்கு சி கிரேடில் இருந்தும், இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு அவரே நியமிக்கப்படவும் உள்ளார். இதேபோல், சி கிரேடில் இருந்து வரும் சூர்யகுமார் யாதவ் சமீபத்திய டி-20 தொடர்களில் அதிரடியாக விளையாடியுள்ளார். மேலும், இந்தியாவின் மிஸ்டர் 360 என்ற அந்தஸ்தையும் அவர் பெற்றுள்ளார். எனவே, அவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
2023 மற்றும் 2024 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2024ல் டி20 உலகக் கோப்பையுடன் மிகவும் முக்கியமான ஒயிட்-பால் தொடர் ஆண்டுகள் ஆகும். டி20 உலகக் கோப்பையில் சில மூத்த வீரர்கள் இடம் பெற வாய்ப்பு இல்லை. மேலும், ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான ஒரு வலுவான இந்திய அணியை கட்டமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு வருகிறது.
அதிகாரப்பூர்வமாக, இந்திய டி20 கேப்டன் பதவிக்கான முடிவை எடுப்பது தொடர்பாக இன்று (டிசம்பர் 21) பிசிசிஐ நடத்திய அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்திற்கான 12 அம்ச நிகழ்ச்சி நிரலில் இல்லை. ஆனால், ஹர்திக் பாண்டியா அடுத்த டி20 கேப்டனாக உயர்த்தப்படுவார் என்ற கருத்து வலுவாக உள்ளது.

இந்திய அணியில் பதவி உயர்வு – இறக்கம் – சேர்ப்பு
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல்
இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் சமீபத்தில் தனது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் நேர்த்தியான தொடக்க வீரராகவும் அவர் மேம்பட்டு இருக்கிறார். இதனால், அவர் கிரேடு ஏ அல்லது கிரேடு பி பிரிவுகளுக்குள் முன்னேறுவார். அதேவேளையில், “லார்ட்” ஷர்துல் தாக்கூர் சமீபத்திய டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் இடம் பிடிக்கவில்லை. அதனால், கிரேடு சி பிரிவுக்கு பதவி இறக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
தனக்கான வாய்ப்பை மீட்டெடுத்த பிறகும், சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் வெற்றிகரமாகத் திரும்பிய பிறகும், குல்தீப் யாதவ் கிரேடு சி பிரிவில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இதேபோல், ஆக்ரோஷமான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான இஷான் கிஷன் மற்றும் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடாவும் கிரேடு சி பிரிவில் நுழைவதற்கு வாய்ப்புள்ளது.
தக்கவைக்கும் வீரர்கள்
உமேஷ் யாதவ், ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தீபக் சாஹர் போன்றவர்கள் தங்கள் கிரேடு சி ஒப்பந்தத்தை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. உமேஷ் டெஸ்ட் அணியில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். தவான், புவி, சாஹல், சாஹர் போன்ற வீரர்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து வருகின்றனர்.
தவான் இப்போது ஒருநாள் அணியில் மட்டுமே விளையாடுகிறார். வழக்கமான ஆட்டக்காரர்கள் இல்லாத சில சந்தர்ப்பங்களில் ஒருநாள் அணியை வழிநடத்தியும் வருகிறார். மேலும் கடந்த சீசனில் புவி பெரும்பாலும் டி20- களில் இடம்பெற்றார்.
ஒப்பந்தங்களை இழக்க வாய்ப்புள்ள வீரர்கள்
இஷாந்த் சர்மா, அஜிங்க்யா ரஹானே,
ரஹானே, இஷாந்த், விஹாரி மற்றும் சாஹா ஆகியோர் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்களாக இருந்தனர் மற்றும் சில ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்ற மயங்க், எதிர்காலத்தில் வெள்ளை பந்தில் திரும்புவதற்கு வாய்ப்பில்லை.
2021-22 வீரர் ஒப்பந்தங்கள்:
கிரேடு ஏ+: விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா
கிரேடு ஏ: ஆர் அஷ்வின், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ரிஷப் பந்த்
கிரேடு பி: சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், இஷாந்த் சர்மா
கிரேடு சி: ஷிகர் தவான், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார்,
கிரேடு ஏ+ வீரர்களுக்கு ரூ.7 கோடியும், கிரேடு ஏ-க்கு ரூ.5 கோடியும், கிரேடு பி-க்கு ரூ.3 கோடியும், கிரேடு சி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடியும் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையில் சேர்க்கப்படாத வழக்கமான போட்டிக் கட்டணத்தை வீரர்கள் தொடர்ந்து பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil