worldcup 2023 | india-vs-australia | ahmedabad:
இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நாளை ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 19 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கான அகமதாபாத் ஆடுகளம் (பிட்ச்) தயாரிப்புகளை பி.சி.சி.ஐ கியூரேட்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏனெனில், ஐ.சி.சி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் (பிட்ச்) ‘சாதகம் இல்லாமல்’ தயாராகுமா என்று ஐ.சி.சி-யின் ஆடுகளம் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் கேள்வி எழுப்பி இருந்தார்.
அவர் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் அகமதாபாத் சென்றதாகவும், அவர் நாளை ஆடுகளம் தயாரிப்பு பணிகளில் சேருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். "ஆண்டி அட்கின்சன் இன்னும் அவரது நாட்டுக்கு (நியூசிலாந்து) திரும்பவில்லை. அவர் இன்று மதியம் ஐ.சி.சி பிரதிநிதிகளுடன் வந்துள்ளார். அதனால் மைதானத்திற்கு வரவில்லை. அவர் ஆடுகளத்தின் தயாரிப்பை சரிபார்க்க நாளை இருப்பார்" என்று ஐ.சி.சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டிக்கான ஆடுகளத்தை இந்திய அணி நிர்வாகம் மாற்றிவிட்டதாக ஆண்டி அட்கின்சன் குற்றம் சாட்டி இருந்தார். இருப்பினும், நாக்-அவுட் போட்டிகளை புதிய ஆடுகளத்தில் நடத்துவது போன்ற விதி எதுவும் இல்லை என்று ஐ.சி.சி பின்னர் தெளிவுபடுத்தியது. இது குறித்து அவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை, பி.சி.சி.ஐ-யின் இரண்டு மூத்த தலைவர்கள் ஆஷிஷ் பௌமிக் மற்றும் தபோஷ் சாட்டர்ஜி, முன்னாள் இந்திய சீமர் மற்றும் பி.சி.சி.ஐ-யின் ஜி.எம் (உள்நாட்டு கிரிக்கெட்) அபே குருவில்லா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் தயாரிப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
இறுதிப் போட்டிக்கு பயன்படுத்தப்படும் டிராக் பயன்படுத்தப்பட்டதா அல்லது புதிய மேற்பரப்புதானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இரண்டு மூத்த க்யூரேட்டர்கள் 22-யார்ட் ஸ்ட்ரிப்பில் ஹெவி ரோலர் பயன்படுத்துவதை கண்காணித்தனர். ''கருப்பு மண்ணில் கனமான ரோலர் பயன்படுத்தப்பட்டால், மெதுவான பேட்டிங் டிராக்கை உருவாக்க வேண்டும். அங்கு நீங்கள் பெரிய ஸ்கோரைப் பெறலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து லைன் மூலம் அடிக்க முடியாது. 315 என்பது அதிகபட்ச ஸ்கோராக இருக்கலாம். ஏனெனில் இரண்டாவது பேட்டிங் செய்ய அது கடினமாக இருக்கும்,'' என்று மாநில சங்கக் கண்காணிப்பாளர் விளக்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“