Advertisment

டி20 உலகக் கோப்பை தோல்வி: பறிபோகும் ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன் பதவி?

டி20 உலகக் கோப்பையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியதைத் தொடர்ந்து, இந்திய மகளிர் அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்வது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆலோசித்து வருகிறது.

author-image
WebDesk
New Update
BCCI Harmanpreet Kaur India cricket team captain women T20 World Cup Tamil News

பி.சி.சி.ஐ தேர்வுக் குழு மற்றும் தலைமை பயிற்சியாளர் அமோல் முசும்தாரை சந்தித்து கேப்டனாக ஹர்மன்ப்ரீத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்கும் என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.

Devendra Pandey - தேவேந்திர பாண்டே

Advertisment

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளும, 2வது அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து பெண்களும் மோதவுள்ளன. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: BCCI set to take a call on Harmanpreet Kaur’s future as India captain

இந்த பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய பெண்கள் அணி களமாடிய நிலையில், அரையிறுதிக்கு தகுதி பெறாமல், லீக் சுற்றுடன் வெளியேறியது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. 

பறிபோகும் கேப்டன் பதவி?

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியதைத் தொடர்ந்து, இந்திய மகளிர் அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்வது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆலோசித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் முதன்முறையாக, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஐ.சி.சி போட்டியில் நாக் அவுட் கட்டத்தை கூட எட்ட முடியமால் வெளியேறி இருக்கிறது. 

இதையடுத்து, பி.சி.சி.ஐ தேர்வுக் குழு மற்றும் தலைமை பயிற்சியாளர் அமோல் முசும்தாரை சந்தித்து கேப்டனாக ஹர்மன்ப்ரீத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்கும் என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது. அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிக்கான அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு இந்த சந்திப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. 

ஹர்மன்ப்ரீத் கவுர், 2016 ஆம் ஆண்டில் இந்திய டி20 மகளிர் அணி கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான இந்திய அணி, சொந்தம் மண்ணில் நடைபெற்ற தொடரில் அரையிறுதிக்கு முன்னேற தவறி இருந்தது. நாக் அவுட் சுற்றுக்களுக்கு முன்னேறினாலும், இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லவில்லை. குறிப்பாக, 2020-ல் இறுதிப் போட்டியில் நுழைந்த இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது. 

இந்த ஆண்டு நடந்த தொடரில், இந்தியா வலுவான அணி இருந்தபோதிலும், நான்கு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேட்டிங்கில் தனது பங்கை வகித்தாலும், சீரற்ற பேட்டிங் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. குறிப்பாக, இந்தியா தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இது அரையிறுதிக்கான வாய்ப்பைக் கடுமையாகப் பாதித்தது. 

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவிடம் தோற்று, தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது. இப்படியாக இந்தியா தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், கேப்டனை மாற்ற திட்டமிட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டாலும், அவர் அணியில் தொடர்வார் என்று தெரிகிறது. 

"புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டுமா என்பது குறித்து பி.சி.சி.ஐ நிச்சயமாக விவாதிக்கும். அணி விரும்பிய அனைத்தையும் இந்திய வாரியம் வழங்கியுள்ளது, மேலும் ஒரு புதிய முகம் அணியை முன்னோக்கி வழிநடத்தும் தருணம் இது என்று நாங்கள் உணர்கிறோம். ஹர்மன்ப்ரீத் தொடர்ந்து அணியின் முக்கிய வீராங்கனையாக இருப்பார், ஆனால் இது மாற்றத்திற்கான நேரம் என்று பிசிசிஐ உணர்கிறது” என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். 

அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக புதிய கேப்டனை பி.சி.சி.ஐ நியமிக்குமா என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும். அத்தகைய அழைப்பு மூலம், புதிய கேப்டனுக்கு உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்க போதுமான நேரம் கிடைக்கும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

World Cup Indian Cricket Team Indian Cricket Bcci Harmanpreet Kaur Womens World Cup indian women cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment