Rahul Dravid | Indian Cricket Team | Chennai Super Kings | Stephen Fleming: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) நேற்று திங்கள்கிழமை அழைப்பு விடுத்தது.
பி.சி.சி.ஐ திட்டம்
இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங்கை இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்ய பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது. இருப்பினும், புதிய தலைமைப் பயிற்சியாளர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என பி.சி.சி.ஐ நிபந்தனை வித்தித்துள்ளது. இதனால், ஃப்ளெமிங் உண்மையில் அந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். ஏன்னென்றால், அவர் வருடத்திற்கு 10 மாதங்கள் அணியுடன் பயணிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: BCCI sounds out CSK head coach Stephen Fleming to succeed Rahul Dravid
2009 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வரும் ஸ்டீபன் ஃப்ளெமிங், ராகுல் டிராவிட்டிடம் இருந்து பொறுப்பேற்க பொருத்தமான நபராகக் கருதப்படுகிறார் என்று பி.சி.சி.ஐயின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா அனைத்து வடிவங்களிலும் மாற்றத்தின் காலகட்டத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளது. மேலும் ஃப்ளெமிங்கின் ஆளுமை-நிர்வாகத் திறன்கள், நேர்மறையான சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த வீரர்களை வெளிக்கொணரும் திறன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரது ஈர்க்கக்கூடிய வெற்றி விகிதம் ஆகியவை பெரியதாக நம்பப்படுகிறது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்பது பற்றி ஐ.பி.எல் தொடரின் போது, ஏற்கனவே முறைசாரா விவாதங்கள் நடந்துள்ளன என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது. அதன்படி, 51 வயதான ஸ்டீபன் ஃப்ளெமிங், சி.எஸ்.கே அணியை விட்டு வெளியேற விரும்புவது குறித்து அணி நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும், வழக்கம் போல் அவர் தனது சி.எஸ்.கே தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை நீட்டிக்க விரும்புகிறார் என்றும் புரிந்துகொள்ளப்படுகிறது.
2009 இல் சி.எஸ்.கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஆனதில் இருந்து, ஃப்ளெமிங் உலகின் சிறந்த டி20 பயிற்சியாளராக பார்க்கப்படுகிறார். ஆஸ்திரேலியா பிக் பாஷ் தொடருக்கான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு நான்கு ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்த அவர் சி.எஸ்.கே அணியைத் தவிர, அவர் தென் ஆப்ரிக்காவின் எஸ்.ஏ 20 (SA20) இல் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றின் தலைமைப் பயிற்சியாளராகவும் உள்ளார். இந்த அணிகள் இரண்டும் சி.எஸ்.கே நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது.
மேலும், அவர் இங்கிலாந்து தி ஹன்ட்ரட் தொடருக்கான சதர்ன் பிரே அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் இந்த ஜூலையில் மிகவும் பிஸியாக இருப்பார். ஏன்னெனில், மேஜர் லீக் கிரிக்கெட் மற்றும் தி ஹன்ட்ரட் லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளன.
இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக ஃப்ளெமிங்கைப் பி.சி.சி.ஐ பார்ப்பதில் ஆச்சரியமில்லை. சி.எஸ்.கே-வின் வெற்றிக் கதையில் ஒரு மைய புள்ளியாக இருக்கும் ஃப்ளெமிங்கிற்கு உள்நாட்டில் ஏராளமான பாராட்டுக்கள் உள்ளன. அவர் விளையாடும் நாட்களில் ஒரு புத்திசாலித்தனமான கேப்டனாக இருந்ததோடு, ஐ.பி.எல்-லில் ஒரு அணிக்கு என்ன தொடர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்பதைக் காட்டியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் ஒரு அணிக்கு நீண்ட காலம் பயிற்சியாளராக பணியாற்றியவராக அறியப்படும் அவர், சி.எஸ்.கே அணி ஐந்து சாம்பியன் பட்டங்கள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வெல்ல வழிகாட்டியுள்ளார். மேலும், அவரிடம் சிறந்த வீரர்களைப் பிரித்தெடுக்கும் குணம் இருக்கிறது. அதற்கு, ஷிவம் துபே சிறந்த உதாரணம் எனலாம். அடிப்படை திறன்-தொகுப்பு பயிற்சி தவிர, ஃப்ளெமிங் தனது தலைமைத்துவ திட்டத்திற்காகவும் அறியப்படுகிறார். இது ஏராளமான இந்திய உள்நாட்டு வீரர்களுக்கு பயனளிக்கிறது.
இந்தியாவின் மூத்த வீரர்களும் அத்தகைய பண்பு மற்றும் வலுவான தொழில்நுட்ப அறிவு கொண்ட ஒரு பயிற்சியாளரை விரும்புகிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. ஏனெனில் இது அடுத்த மூன்று ஆண்டுகளில் அணியின் மையத்தை உருவாக்க எதிர்பார்க்கப்படும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு உதவும்.
பி.சி.சி.ஐ-யால் ஃபிளெமிங்கை ஈர்க்க முடியவில்லை என்றால், அது எப்படி செல்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் ரெட்-பால் மற்றும் ஒயிட்-பால் என தனித்தனி பயிற்சியாளர்களை வைத்துள்ளன. ஆனால், பி.சி.சி.ஐ இன்னும் இந்த அணுகுமுறைக்கு செல்ல தயங்குகிறது. ஏனெனில் இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் இரண்டு வெவ்வேறு வீரர்கள் இல்லை.
ஃப்ளெமிங்கைத் தவிர, ஐ.பி.எல் அணிகளுடன் தொடர்புடைய மற்ற வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும் இந்தியப் பணியை ஏற்கத் தயங்குகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஒரு வருடத்தில் 10 மாதங்கள் அணியுடன் பயணிக்க வேண்டும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது. டிராவிட்டிற்கு கூட நேர இடைவெளிகள் வழங்கப்பட்டன. அவருக்கு அடிக்கடி சில ஒயிட்-பால் தொடர்களில் இருந்து ஓய்வு கிடைத்தது.
முக்கிய அளவுருக்கள்
இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு சில முக்கிய முக்கிய அளவுருக்களை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
- உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் அணியை உருவாக்குவதற்கு பயிற்சியாளர் பொறுப்பேற்க வேண்டும். அவர் அனைத்து நிலைகளிலும் வடிவங்களிலும் அணி நிலையான வெற்றியை பெற உதவ வேண்டும். தற்போதைய மற்றும் எதிர்கால கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பங்குதாரர்களின் விளையாட்டை அவர்களின் அணுகுமுறையுடன் ஊக்குவிக்க வேண்டும்.
- இந்திய ஆடவர் அணியின் செயல்திறன் மற்றும் நிர்வாகத்திற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் தலைமைப் பயிற்சியாளருக்கு இருக்கும்.
- தலைமைப் பயிற்சியாளர் சிறப்புப் பயிற்சியாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்களின் குழுவை வழிநடத்துவார் மற்றும் அவர்களின் வேலைகள், செயல்திறன் மற்றும் தற்போதைய வளர்ச்சியை வரையறுப்பதற்கு பொறுப்பாக இருப்பார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.