இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு ரூ. 7.5 லட்சம் கட்டணமாகப் பெறுவார்கள் என்றும், முழு சீசனிலும் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர் ரூ. 1.05 கோடி வரை கட்டணமாக பெறுவார்கள் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா சனிக்கிழமை அறிவித்தார்.
ஜெய்ஷா தனது X பக்கத்தில், "ஐ.பி.எல் வரலாற்றில் இது ஒரு வரலாற்று நடவடிக்கை. ஐ.பி.எல் விளையாடும் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு ரூ. 7.5 லட்சம் போட்டிக் கட்டணமாக வழங்கப்படும். முதலில் முதல் போட்டி கட்டணத்தைஅறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர் அவரின் ஒப்பந்த தொகை உடன் கூடுதலாக ரூ.1.05 கோடி வரை பெற முடியும்" என்றார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக போட்டிக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2008 ஐ.பி.எல் தொடங்கப்பட்டதில் இருந்து வீரர்கள் அவர்கள் ஏலம் எடுக்கப்படும் விலையை ஊதியமாக பெற்று வந்தனர்.
ஐபிஎல் போட்டிகளுக்கு (ஒரு போட்டிக்கு) அறிவிக்கப்பட்ட போட்டிக் கட்டணம், இந்தியாவில் முதல்தர போட்டியில் விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரர் சம்பாதிக்கும் தொகையை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“