ஐபிஎல் அணி வீரர்களுக்கு விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும், பிசிசிஐயின் வருவாயை பெருக்கும் நோக்கிலும் ஆண்டுக்கு 2 ஐபிஎல் தொடர்கள் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( BCCI) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்த பரபரப்பு குறைய துவங்கிய நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதிலும் மக்களின் சுவாரசியம் குறைந்ததை தொடர்ந்து 20 ஓவர்கள் கொண்ட டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் உலககோப்பை கோப்பையும், அதேபோல், டி20 உலககோப்பை போட்டியும், ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் லீக் டி20, ஐபிஎல் போட்டிகள் என வரிசைகட்டி வந்துகொண்டிருக்கின்றன.
ஆண்டுதோறும் செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. 2014ம் ஆண்டுக்கு பிறகு இந்த தொடர் நடத்தப்படவில்லை. எனவே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய கோப்பை தொடர்ந இந்த காலகட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி, பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக்குழுவினரிடையேயான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஐபிஎல் தலைமை செயல் அதிகாரி ஹேமங் அமீன், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் தற்போது ஆண்டுதோறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெறாத நிலையில், ஆண்டுதோறும் 2 ஐபிஎல் தொடர்களை நடத்த திட்டமிடப்பட்டது.
ஒரு சீசன் இந்தியாவிலும், மற்றொரு சீசன் இந்தியாவிற்கு வெளியேயும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் மூலம், விளையாட்டு வீரர்களின் திறன் மேம்படுவதோடு, அதிக வருவாய் ஈட்டவும் முக்கிய காரணியாக அமைகிறது. இந்திய மக்களை ஐபிஎல் சீசன் மகிழ்த்து வரும் நிலையில், இந்தியாவிற்கு வெளியே நடத்தப்படும் ஐபிஎல் தொடரால், வெளிநாடு வாழ் இந்தியர்களும், வெளிநாடுகளில் வாழும் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவது ஐபிஎல் சீசன் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளை தற்போது நடத்த அனுமதி பெற்றுள்ள ஐஎம்ஜி நிறுவனத்துக்கு பதிலாக பிசிசிஐயே இந்த தொடரை நடத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரிந்தர் கண்ணா முறையீடு செய்திருந்தார். இதுகுறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், ஆண்டுக்கு ரூ.33.5 கோடி என்ற அடிப்படையில் 2022ம் ஆண்டு வரை அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதற்குப்பிறகு ஐபிஎல் தொடர்களை, பிசிசிஐ அமைப்பே நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.