BCCI Tamil News: கிரிக்கெட், கடந்த 10 ஆண்டுகளில் பெரும் பணத்தை ஈட்டிய ஒரு விளையாட்டாக வலம் வருகிறது. அதன் மூலம் கோடிகளை குவித்து வரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகின் முதண்மையான பணக்கார வாரியமாக இருந்து வருகிறது. இருப்பினும், அதன் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மைதானங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. இதனால், அவ்வப்போது பிசிசிஐ கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் எதிர்கொண்டு வருகிறது.
பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் போது, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் சுத்தமான கழிப்பறைகள் இல்லாததால் ரசிகர்கள் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதேபோல், மும்பையில் உள்ள வான்கடே கடந்த மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளுக்கு முன்பாக மோசமான சுகாதார நிலைமைகள் இருப்பதாக ரசிகர்கள் புகார் தெரிவித்தனர்.
புனரமைப்பு
இந்நிலையில், இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவில் உள்ள 5 முக்கிய மைதானங்களை பெரிய அளவில் புதுப்பிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதில் டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, மொஹாலி மற்றும் மும்பை போன்ற 5 நகரங்களில் அமைந்துள்ள மைதானங்கள் அடங்கும்.
இந்த 5 மைதானங்களை புதுப்பிக்கும் திட்ட செலவு பல நூறு கோடிகளாக கணக்கீடப்பட்டுள்ளது. மைத்தனத்தின் கூரை புதுப்பிப்பதற்கான செலவைக் கணக்கிடாவிட்டாலும், கட்டிடம் நடைபெறும் இடத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக டெல்லியில் குறைந்தபட்சம் சாத்தியமில்லை என்றாலும், செலவுகள் மிகப்பெரியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி மைதானத்தை சீரமைக்க ரூ.100 கோடியும், ஐதராபாத்துக்கு ரூ.117.17 கோடியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்கு ரூ.127.47 கோடியும், மொஹாலியில் உள்ள பழைய பிசிஏ மைதானத்துக்கு ரூ.79.46 கோடியும், வான்கடேவுக்கு ரூ.78.82 கோடியும் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மைதாங்களின் கூரையை சரிபார்க்கும் வேலையையும் சேர்க்கப்பட்டால் செலவுகள் கடுமையாக அதிகரிக்கும்.
12 மைதானங்களில் போட்டிகள்
இந்திய மண்ணில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு 12 நகரங்களில் உள்ள மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இறுதிப் போட்டி நடக்கும் மைதானமாக எதிர்பார்க்கப்படும் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை ஆகியவை அடங்கும்.
46 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தியா கடைசியாக 2011 ஆம் ஆண்டு இலங்கையுடன் சேர்ந்து ஒருநாள் உலகக் கோப்பையை நடத்தியது. அப்போது மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி கோப்பையை வென்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.