Advertisment

தனிப்பட்ட உதவியாளர், குடும்பத்தினர் பயணம்... பி.சி.சி.ஐ அதிரடி கட்டுப்பாடு: மீறினால்... ஐ.பி.எல் ஆட தடை!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ நிர்வாகம் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கட்டாயம் வீரர்கள் விளையாட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BCCI restrictions

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 10 விதிமுறைகளை பி.சி.சி.ஐ நிர்வாகம் விதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

அண்மையில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து, பி.சி.சி.ஐ சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: BCCI issues curbs on personal staff, family travel, endorsement shoots during tours for centrally-contracted cricketers; violators may face IPL ban

Advertisment
Advertisement

 

அதன்படி, ரஞ்சி கோப்பை, துலிப் கோப்பை போன்ற உள்ளூர் விளையாட்டு போட்டிகளில், சர்வதேச அளவில் விளையாடும் வீரர்கள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப் பயணங்களின் போது, தனிப்பட்ட முறையில் சமையற் கலைஞர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை உடன் அழைத்துச் செல்ல வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சமீப காலத்தில் போட்டிகளில் விளையாடும் போது வீரர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனங்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்ததும் அவர்கள் விரைவாகவே தாங்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால், அனைத்து வீரர்களும் ஒன்றாகவே பயணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 45 நாட்களுக்கு மேல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடும் போது மட்டுமே, வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை 14 நாட்களுக்கு உடன் அழைத்துச் செல்லலாம் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், குடும்பத்தினருடன் செல்லும் வீரர்கள் பெரும்பாலும் அவர்களுடன் மட்டுமே நேரம் செலவிடுவதாக கூறப்படுகிறது.

சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து வீரர்களும், கட்டாயமாக பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதில் பங்கேற்றிருக்கும் வீரர்கள், மற்ற விளம்பர படம் உள்ளிட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் கலந்து கொண்டுள்ள போட்டித் தொடர்கள்  முடிவடைந்த பின்னர், அனைவரும் ஒன்றாகவே தாயகம் திரும்ப வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக யாரும் திரும்பக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாகவே போட்டி முடிவடைந்தாலும் வீரர்கள் ஒன்றாகவே திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்று பி.சி.சி.ஐ விதித்துள்ள விதிகளுக்கு கட்டுப்படாமல் செயல்படும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐ.பி.எல் போன்ற தொடர்களில் பங்கேற்க அனுமதி மறுப்பு, ஊதியத்தில் இருந்து அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளில் ஏதேனும் தளர்வுகள் தேவையென்றால், முன்னதாக அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Indian Cricket Team Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment