'முன்பே தீர்மானிக்கப்பட்ட ஓய்வு' அறிவிக்கும் போக்கைத் தடுக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அதன் வீரர்களுக்கான புதிய பாலிசியை விரைவில் உருவாக்கவுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ செயலர் ஜெய் ஷா பேசுகையில், இந்தக் பாலிசி அலுவலகப் பணியாளர்களால் வகுக்கப்படும் என்றும், ஒரு மாதத்திற்குப் பிறகு அபெக்ஸ் கவுன்சில் முன் வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஜெய் ஷா, “முன்பே தீர்மானிக்கப்பட்ட ஓய்வுப் போக்கைத் தடுப்பதற்கான கொள்கையுடன் நாங்கள் வருவோம். அலுவலகப் பணியாளர்கள் ஒரு கொள்கையை உருவாக்கி ஒப்புதலுக்காக திருப்பி அனுப்புவார்கள்” என்று கூறினார்.
கூலிங் ஆஃப் பீரியட்
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ கூலிங் ஆஃப் பீரியட்டை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதன் பொருள் இந்தியன் பிரீமியர் லீக் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறும் வீரர்கள் வெளிநாட்டு லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவதற்கு முன் கூலிங் ஆஃப் பீரியட்டில் இருக்க வேண்டும். ஏனெனில், முன்னாள் இந்திய வீரர்கள் சிலர் ஓய்வை அறிவித்த அடுத்த வாரத்திலே உடனடியாக வெளிநாட்டில் நடக்கும் டி20 லீக்கில் சேர்ந்து விடுகின்றனர். சீசன் முழுவதும் பல லீக்குகள் வருவதால், முன்னாள் இந்திய வீரர்களுக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது.
மகளிர் அணி துணை ஊழியர்கள் விண்ணப்பம்
இந்திய மகளிர் அணிக்கான துணை ஊழியர்களுக்கான விண்ணப்பங்களை இந்திய வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) பரிந்துரை செய்தும் மகளிர் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்யாததற்கும் இதுவே முக்கிய காரணம்.
“சிஏசி தலைமை பயிற்சியாளரின் பெயரை பரிந்துரைத்துள்ளது. நேர்காணலும் செய்வார்கள். அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளரையும் நேர்காணல் செய்வார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன் அனைத்து பயிற்சியாளர்களின் பெயர்களையும் அறிவிப்போம்.
ஊடக உரிமை ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் இறுதிக்குள் ஒப்பந்தம் செய்யப்படும்" என்று ஜெய் ஷா கூறினார்.
அனுமதி
இதற்கிடையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்பதற்கு அபெக்ஸ் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து ஜெய் ஷா பேசுகையில், “நாங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளோம். நமது ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்க அபெக்ஸ் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது." என்று கூறினார்.
ஆண்கள் அணி பி அணியாகும். ஏனெனில் முதல் தேர்வு வீரர்கள் சொந்த மண்ணில் விளையாடப்படும் 50 ஓவர் உலகக் கோப்பையின் மத்தியில் இருப்பார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரையிலும், ஐசிசி உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் நவம்பர் 23 வரையிலும் நடைபெற உள்ளது.
உலகக் கோப்பைக்கு (செப்டம்பர்) முன் இந்தியா மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடும் என்றும், உலகக் கோப்பைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் என்றும், புதிய ஊடக உரிமை ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 8 ஒருநாள் போட்டிகளுடன் தொடங்கும் எனவும் ஜெய் ஷா கூறினார்.
இம்பாக்ட் பிளேயர் விதி
அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகளில், இம்பாக்ட் பிளேயர் விதியின் தரப்படுத்தலும் அடங்கும். சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் ஆகியவற்றிற்கு இம்பாக்ட் பிளேயர் விதி வேறுபட்டது. சையத் முஷ்டாக் அலி போட்டியில், அணிகள் விளையாடும் லெவன் வீரர்களில் ஒரு வீரரை மாற்ற முடியும். ஆனால் ஒரு இன்னிங்ஸின் 14 வது ஓவருக்கு முன் அதை செய்ய வேண்டும். ஐபிஎல்லில், அத்தகைய கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.