ஐசிசி தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலியை நிராகரித்த நிலையில் தற்போதைய தலைவர் கிரெக் பார்க்லேவை பிசிசிஐ ஆதரிக்கவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவராக கிரெக் பார்க்லே உள்ளார். இவரது, பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு ஆதரவளிப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் ஐசிசியின் பிசிசிஐ பிரதிநிதயாக ஜெய் ஷா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கும் தற்போது வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக திங்களன்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து கங்குலி விரைவில் வெளியேறுவது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பிசிசிஐ தலைவருமான ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுப்பதாகக் கூறினார்.
இது தொடர்பாக பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐசிசி தேர்தலில் பிசிசிஐ யாரை ஆதரிக்கும் என்பது குறித்து முடிவுகள் வெளியிடப்படும்” என்றார்.
இந்த நிலையில், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினரும், கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவருமான ரோஜர் பின்னி தற்போது புதிய பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை நடுநிலையான இடத்தில் நடைபெறும்: ஜெய் ஷா
பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட் உறவுகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போது, பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷா, “ஆசிய கோப்பை நடுநிலையான இடத்தில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil