பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, புதிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவராக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: BCCI Secretary Jay Shah becomes youngest-ever ICC chairman
35 வயதான ஜெய் ஷா இந்த பதவியை வகிக்கும் இளையவர் ஆனார். மூன்றாவது முறையாக பதவிக்கு வர விரும்பாத கிரெக் பார்க்லேயிடமிருந்து ஜெய் ஷா ஐ.சி.சி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்கிறார்.
"சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் நான் தாழ்மையுடன் இருக்கிறேன்" என்று ஜெய் ஷா தனது நியமனம் குறித்து கூறினார்.
கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாக, 128 ஆண்டுகளில் முதன்முறையாக லாஸ் ஏஞ்சல்ஸில் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் அடுத்த ஒலிம்பிக்கில் இடம்பெற உள்ள கிரிக்கெட் விளையாட்டை உலகளாவியதாக மாற்ற ஜெய் ஷா அழுத்தம் கொடுத்தார்.
"கிரிக்கெட்டை மேலும் உலகமயமாக்க ஐ.சி.சி குழு மற்றும் எங்கள் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன். பல வடிவங்களின் சகவாழ்வை சமநிலைப்படுத்துவதும், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதும், புதிய உலகளாவிய சந்தைகளுக்கு எங்கள் அடுத்தக் காட்ட நிகழ்வுகளை அறிமுகப்படுத்துவதும் என அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான கட்டத்தில் நாங்கள் நிற்கிறோம். முன்னெப்போதையும் விட கிரிக்கெட்டை மிகவும் உள்ளடக்கிய மற்றும் பிரபலமாக்குவதே எங்கள் குறிக்கோள்,” என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், “கற்ற மதிப்புமிக்க பாடங்களை நாம் கட்டியெழுப்புவோம், அதே வேளையில், உலகளவில் கிரிக்கெட் மீதான அன்பை உயர்த்த புதிய சிந்தனை மற்றும் புதுமைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஒலிம்பிக்கில் எங்கள் விளையாட்டைச் சேர்ப்பது கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது, மேலும் இது விளையாட்டை முன்னோடியில்லாத வகையில் முன்னோக்கி கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் ஜெய் ஷா கூறினார்.
கடந்த வாரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜெய் ஷா உலக கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் தலைமைப் பதவிக்கு முன்னணியில் இருப்பவர் என்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா நியமனம் செய்யப்படுவதால், அடுத்த ஆண்டு வரை பி.சி.சி.ஐ செயலாளராக இருக்கும் அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது, பி.சி.சி.ஐ அலுவலகத்தில் தனது பொறுப்பை ஜெய் ஷா விட்டுவிட வேண்டும். ஏனெனில், 2016 முதல், ஐ.சி.சி தலைவர் ஒரு சுயாதீன பதவியாக மாறியுள்ளது, அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“