இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், குடும்ப அவசரநிலை காரணமாக தனது வீட்டுக்கு செல்வதற்கும், மீண்டும் திரும்பி வருவதற்கும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனி விமானத்தை ஏற்பாடு செய்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது வர்ணனையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து 3-வது டெஸ்ட் போட்டி, ராஜ்கோட் மைதானத்தில் கடந்த பிப் 15-ந் தேதி தொடங்கியது.
ஆங்கிலத்தில் படிக்க : BCCI secretary Jay Shah had arranged charter plane for R Ashwin’s trip home and back: Ravi Shastri
இந்த டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவன் அணியின் இடமபெற்றிருந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், போட்டியின் இரண்டாவது நாளில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டிய நிலையில், அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, உடல்நிலை சரியில்லாத தனது தாயாரைப் பார்ப்பதற்காக அஸ்வின் சென்னைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து “குடும்பத்தின் அவசரநிலை காரணமாக அஸ்வின் அவசர அவசரமாக சென்னை திரும்பினார். இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட அறிவிப்பில், ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் 2-வது நாளுக்குப் பிறகு, குடும்ப அவசர நிலை காரணமாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்திருந்தது.
🚨 UPDATE 🚨: R Ashwin set to rejoin #TeamIndia from Day 4 of the 3rd India-England Test.#INDvENG | @IDFCFIRSTBankhttps://t.co/rU4Bskzqig
— BCCI (@BCCI) February 18, 2024
இதனைத் தொடர்ந்து சென்னைக்கு திரும்பிய அஸ்வின், தனது தாயரை பார்த்துவிட்டு, தற்போது 4-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியுடன் இணைந்துள்ளதாக பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. டீ பிரேக் இடைவேளையில் அணியுடன் இணைந்த அஸ்வின், எஞ்சிய ஆட்டத்தில் பங்கேற்க உள்ளார். மேலும் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளருடன் இணைந்து பந்துவீசிக்கொண்டிருந்தார் அஸ்வின்.
இதனிடையே அஸ்வின் தனது வீட்டுக்கு செல்வதற்கும், மீண்டும் திரும்பி ராஜ்கோட் வருவதற்கும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனி விமானத்தை ஏற்பாடு செய்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது வர்ணனையில் தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் (214), சர்ப்ரஸ்கான் அரைசதம் (68)அடித்து களத்தில் இருந்த நிலையில், இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதன் மூலம் 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.