/indian-express-tamil/media/media_files/2025/09/29/bcci-secy-devajit-saikia-to-pak-board-chief-mohsin-naqvi-return-asia-cup-trophy-and-medals-tamil-news-2025-09-29-07-54-17.jpg)
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9 ஆம் தேதி முதல் பரபரப்பாக நடைபெற்று வந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடருக்கான இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலபரீட்ச்சை நடத்திய நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும், 9-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
இந்நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றதும் ஆட்டநாயகன் தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு ரன்னர்-அப் 2-வது பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது. பின்னர், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டது. போட்டி முடிந்ததும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தாமதமானது. அப்போது, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
மோஷின் நக்வி இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்குவார் என்று தொகுப்பாளர் சைமன் டவுல் அறிவித்தார். ஆனால், அவருக்குப் பதிலாக வங்கதேசத்தின் அமினுல் இஸ்லாம் அவற்றை வழங்கினார். இருப்பினும், நக்வி இரண்டாம் இடம்பிடித்தவர்களுக்கான காசோலையை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
இந்த நிலையில், இந்திய அணி கோப்பையை பெற்றுக் கொள்ளாததால் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கோப்பை மற்றும் பதக்கங்களை கையோடு தூக்கி சென்று விட்டதாக பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைகியா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அடுத்த மாதம் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் நக்விக்கு எதிராக பி.சி.சி.ஐ கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.
Mohsin Naqvi was waiting for the Indian players to come on stage to collect the trophy,
— Space Recorder (@1spacerecorder) September 28, 2025
but Indian players were busy watching Instagram reels and reading Space Recorder tweets on the ground
🤣🤣pic.twitter.com/R0hZKRYeQa
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைகியா, "பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். அதற்காக அவர் பதக்கங்களுடன் கோப்பையையும் எடுத்துச் சென்றது சரியல்ல. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான, மிகவும் மோசமான சம்பவம். மேலும் கோப்பையும் பதக்கங்களும் விரைவில் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். நவம்பரில் நடைபெறும் ஐ.சி.சி கூட்டத்தில் இதற்கு எதிராக நாங்கள் பேசுவோம்.
முன்பு நமது ஆயுதப்படைகள் எல்லைப் பகுதியில் வெற்றியை வழங்கின. இப்போது துபாயிலும் அதே விஷயம் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது ஒரு சிறந்த தருணம், இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கியமான சந்தர்ப்பம். முன்பு இது ஆபரேஷன் சிந்தூர், இப்போது இது ஆபரேஷன் கில்லா. எனவே இது சில விரோத நாட்டு மக்கள் செய்த அனைத்து முட்டாள்தனமான செயல்களுக்கும் மிகவும் பொருத்தமான பதில். எனவே இறுதி துபாய் போட்டியின் பிரமாண்டமான நிகழ்வில் இந்த சந்தர்ப்பத்திற்கு இதைவிட சிறந்த பதில் இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.
அனைத்து விளையாட்டுகள் தொடர்பாகவும் இந்திய அரசு வகுத்த கொள்கையை பி.சி.சி.ஐ பின்பற்றுகிறது. எனவே இது இருதரப்பு போட்டியாக இருக்கும்போது, ​​இந்தியா பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு எந்த விரோத நாட்டிற்கோ எதிராக விளையாடப் போவதில்லை. கடந்த 12 முதல் 15 ஆண்டுகளாக பி.சி.சி.ஐ அதைச் செய்து வருகிறது. சர்வதேச போட்டிகளில், அது கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, கால்பந்தாக இருந்தாலும் சரி, நாங்கள் விளையாட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இல்லையெனில், கூட்டமைப்பு சர்வதேச கூட்டமைப்புகளால் தடை செய்யப்படும். எனவே, நாங்கள் மத்திய அரசின் கொள்கையைப் பின்பற்றி வருகிறோம்." என்று அவர் கூறினார்.
பி.சி.சி.ஐ அணிக்கு ரூ.21 கோடி போனஸ் வழங்கியுள்ளதாகவும் பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.