Advertisment

விசா தாமதம்; நாடு திரும்பிய இங்கி., வீரர்... கடுப்பாகிய ஸ்டோக்ஸ்!

ஐதராபாத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு தனது அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீருக்கு விசா தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எரிச்சலடைந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ben Stokes frustrated on visa delay for Shoaib Bashir that ruled him out of 1st Test IND vs ENG Tamil News

இளம் வீரர் சோயிப் பஷீரின் விசா தாமதத்தால் வெறுப்பாக இருக்கிறது என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ben Stokes | India v England: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

Advertisment

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஐதராபாத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு தனது அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீருக்கு விசா தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து எரிச்சலடைந்துள்ளார். "குறிப்பாக கேப்டனாக எனக்கு இது மிகவும் வெறுப்பாக இருக்கிறது" என்று ஸ்டோக்ஸ் தனது "விரக்தி" பற்றி பேசியுள்ளார்.

விசா தாமதம் காரணமாக 20 வயதான ஆஃப் ஸ்பின்னர் சோயிப் பஷீர் இங்கிலாந்துக்குத் திரும்ப வேண்டியிருந்தது. மேலும், அவர் முதல் டெஸ்டில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் எரிச்சலடைந்துள்ளார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 

"டிசம்பர் நடுப்பகுதியில் நாங்கள் அந்த அணியை அறிவித்தோம். இப்போது பாஷ் இங்கு வருவதற்கு விசா இல்லாமல் இருக்கிறார். நான் அவருக்காக அதிக விரக்தியில் இருக்கிறேன். இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருப்பது எப்படி இருக்கும் என்ற அவரது முதல் அனுபவமாக இதுபோன்ற சூழ்நிலையை நான் விரும்பவில்லை. நான் அவருக்காக மிகவும் வருத்தம் கொள்கிறேன்.

ஆனால் அவர் இதை எதிர்கொள்ளும் முதல் கிரிக்கெட் வீரர் அல்ல, இதே போன்ற பிரச்சனைகள் உள்ள பலருடன் நான் விளையாடியிருக்கிறேன். நாங்கள் ஒரு வீரரைத் தேர்ந்தெடுத்தோம், விசா சிக்கல்கள் காரணமாக அவர் எங்களுடன் இல்லை என்பது எனக்கு வெறுப்பாக இருக்கிறது. குறிப்பாக ஒரு இளம் வீரர், அவர் இல்லாதது பெரும் பின்னடைவுக்கு ஆளாகிறேன். இது ஒரு விரக்தியான சூழ்நிலை, ஆனால் நிறைய பேர் அதைப் பெற முயற்சிக்கின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது மற்றும் நான் அவரைப் பற்றி மிகவும் விரக்தியடைகிறேன்." என்றும் இங்கிலாந்து கேப்டன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். 

பஷீர் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்தாலும், சர்ரேயில் பிறந்த அவர் பாகிஸ்தானிய வம்சாவளி ஆவார். மற்ற இங்கிலாந்து அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அபுதாபியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தனர். இதேபோன்ற பின்னணியைக் கொண்ட இங்கிலாந்து தரப்பில் பெயரிடப்பட்ட மற்றொரு இளம் சுழற்பந்து வீச்சாளரான ரெஹான் அகமது, கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான காத்திருப்பில் இருந்து தேவையான ஆவணங்களை ஏற்கனவே வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இஸ்லாமாபாத்தில் பிறந்த உஸ்மான் கவாஜாவும் 2023 ஆம் ஆண்டில், இதேபோன்ற விசா தாமதத்தால் மற்ற ஆஸ்திரேலிய அணி வீரர்களை விட மிகவும் தாமதமாக இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தானின் விசாக்கள், அவர்கள் தங்களது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஒரு நாள் முன்னதாகத்தான் வழங்கப்பட்டதால், துபாயில் தொடருக்கு க்கு முந்தைய பயிற்சி முகாமை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG: Ben Stokes says he’s ‘frustrated’ by visa delay for Shoaib Bashir that ruled him out of 1st Test

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England Ben Stokes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment