Ben Stokes TAMIL NEWS: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியை கேப்டனாக வழிநடத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். ஆல் ரவுண்டர் வீரராக ஜொலித்து வரும் இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ஸ்டோக்ஸ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் தூணாக இவர் விளங்கியவர். குறிப்பாக 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,919 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த நிலையில், ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். 31 வயதான அவர் ஒருநாள் போட்டிகளில் 11 வருடங்கள் இங்கிலாந்து அணிக்காக மட்டையை சுழற்றியும் பந்துகளை வீசியும் இருக்கிறார். அவரது பந்துவீச்சு சராசரி 41.79 ஆகவும், பேட்டிங்கில் 39.44 சராசரியாகவும் வைத்துள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், "நாளை டர்ஹாமில் நடக்கும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்காக எனது கடைசி ஆட்டத்தை விளையாடுகிறேன். இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத கடினமான முடிவாகும். இங்கிலாந்துக்காக எனது நண்பர்களுடன் விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். ஒரு நம்பமுடியாத பயணத்தை நாங்கள் செய்துள்ளோம். மேலும், எனது பணிச்சுமையைக் குறைத்து, டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை வழிநடத்துவதில் கவனம் செலுத்த இருக்கிறேன்." என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலத்தின் புதிய தலைமையின் கீழ் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் கூட்டணி, அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஸ்டோக்ஸ், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், ஒரு டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத போதிலும், இங்கிலாந்திற்கான டி20 தொடரில் தனது "முழு அர்ப்பணிப்பை" வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை அவர் தவறவிட்டார், அப்போது அவர் தனது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்தார்.
தற்போது, ஸ்டோக்ஸ் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரிலும், மற்றும் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்களுக்கான "தி ஹன்ட்ரட் ஃபிரான்சைஸ்" போட்டியிலும் பங்கேற்கிறார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் அவரது அடுத்த வாய்ப்பு, செப்டம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஏழு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வரக்கூடும்.
❤️🏴 pic.twitter.com/xTS5oNfN2j
— Ben Stokes (@benstokes38) July 18, 2022
கிரிக்கெட் சுமை
ஸ்டோக்ஸின் ஓய்வு மற்றும் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றக்கூடிய வீரர்களின் ஓய்வு என்பது கிரிக்கெட் நிர்வாகிகளுக்கு ஒரு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. ஸ்டோக்ஸ் போன்ற ஆல்-ரவுண்டர் வீரர்கள் ஆண்டு முழுவதும் விளையாடுகிறார்கள். குறிப்பாக அவர்கள் விளையாடும் ஃபிரான்சைஸ் டி20 லீக்குகள் அதிக சக்தி வாய்ந்ததாகவும், வீரர்களின் காலெண்டரை அதிகமாக எடுத்துக் கொள்வதாகவும் இருக்கின்றன. இதனால், ஸ்டோக்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களால் சர்வதேச கிரிக்கெட்டின் கடுமையான சமாளிப்பது நம்பத்தகாதது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓல்ட் ட்ராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ஹர்திக் பாண்டியா, எதிர்காலத்தில் இந்தியாவுக்கான அனைத்து வடிவ ஆட்டக்காரராக பார்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டபோது, அவர் தனது நிலைமையைப் பற்றி பின்வருமானாறு குறிப்பிட்டு இருந்தார்.
"பிசியோக்கள் மற்றும் எனது பயிற்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுத்தும், கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்வதையும் நான் பின்பற்றுகிறேன். அதனால், நான் என் மூளையை தேவையில்லாமல் பயன்படுத்துவதில்லை, தேவைப்படும்போது மைதானத்தில் பயன்படுத்துகிறேன். எப்போது விளையாட வேண்டும், எங்கு விளையாட வேண்டும் என்பதற்காக, நான் நிபுணர்களிடம் கேட்கிறேன். இது என் கையில் இல்லை,'' என்று பாண்டியா கூறியிருந்தார். அவர் கடைசியாக 2018 செப்டம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார்.
தற்போது ஐபிஎல் போன்ற ஃபிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்கள் மிகவும் பிரபலமான ஒன்றாக உருவெடுத்து வரும் நிலையில், ஒருநாள் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் புகழ் குறைந்து வருகிறது. தவிர, அவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுபவையாக இருதரப்பு தொடர்கள் உள்ளன. சமீபத்தில், உள்ளூரில் நடக்கவுள்ள ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டை காரணம் காட்டிய தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடப்போவதில்லை என்று தெரிவித்தது.
இங்கிலாந்து அணியானது இந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்பு வரை 16 டி-20 போட்டிகளில் மட்டும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் சிறந்த வரையறுக்கப்பட்ட ஓவர்கள் வீரர்களைக் கொண்ட "தி ஹன்ட்ரட்" ஆகஸ்ட் மாதத்தில் விளையாடப்பட இருக்கிறது.
இது போன்ற நிரம்பிய அட்டவணையில், பல வீரர்கள் தங்கள் உடற்தகுதி மற்றும் புத்துணர்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக விலகுவார்கள் அல்லது ஓய்வெடுக்கப்படுவார்கள். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை தீர்மானிப்பதற்காக டெஸ்ட் அணி தயாராகும் போது, அயர்லாந்திற்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளுக்கு இந்தியா செய்தது போல், மற்ற சிறந்த கிரிக்கெட் நாடுகளும் தனித்தனி வடிவங்களில் இருதரப்பு தொடர்களுக்கு முற்றிலும் தனித்தனி அணிகளைக் கொண்டு வர முடிவு செய்யும்.
மேலும், ஆண்டு முழுவதும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட் ஆடப்படுவதால், இருதரப்பு தொடர்கள் அட்டவணையில் குவிந்து கிடப்பதாலும், தனித் தொடருக்கு தனி அணிகள் தேர்வு செய்யப்படுவதாலும், ஸ்டோக்ஸ் போன்ற ஆல்ரவுண்டர் மற்றும் திறமையான வீரர்களுக்கு கூட, சர்வதேச அளவில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையட வாய்ப்பு வழங்கப்பட போவதில்லை.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.