Advertisment

2 மேட்ச், ஒரே ஓவர் சம்பளம் ரூ16.25 கோடி: நாடு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்

டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்துடன் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்பு உள்ளார்.

author-image
WebDesk
New Update
Ben Stokes To Head Back Home Before IPL 2023 Playoff Tamil News

Ben Stokes to return home, won't play even if CSK reach IPL 2023 play-offs Tamil News

Ben Stokes CSK IPL 2023 Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் 7ல் வெற்றி, 5ல் தோல்வி, ஒரு போட்டிக்கு முடிவு இல்லை என புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அணி பிளே ஆஃப்-க்கு முன்னேற டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அவசியம் வெற்றி பெற வேண்டும். இப்போட்டியானது வருகிற சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.

Advertisment
publive-image

நாடு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்

இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்துடன் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்பு உள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

publive-image

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும், முன்னணி ஆல்ரவுண்டர் வீரருமான பென் ஸ்டோக்ஸ், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு சென்னை அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்பின்னர், நடப்பு சீசனில் களமிறங்கிய ஸ்டோக்ஸ் காயம் காரணமாக அவதியுற்றார். அதனால், அவரால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்ற மற்றும் விளையாட முடியவில்லை. மொத்தமாகவே அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி இருந்தார். மேலும், ஒரு ஒரே ஓவர் தான் பந்துவீசினார்.

publive-image

இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து புறப்பட உள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணி தற்போது பிளேஆஃப்-க்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக இருந்து வரும் நிலையில், ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இடம்பெறாதது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Ben Stokes Cricket Sports Chennai Super Kings Ipl News Ipl Cricket Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment