Advertisment

சிகரெட், சீக்ரெட், வேர்ல்டு சாம்பியன் - வெளியான பென் ஸ்டோக்ஸ் ரகசியம்

உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில், இவ்வளவு பரபரப்பான போட்டியையும் எவரும் பார்த்திருக்க முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிகரெட், சீக்ரெட், வேர்ல்டு சாம்பியன் - வெளியான பென் ஸ்டோக்ஸ் ரகசியம்

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது. உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில், இவ்வளவு பரபரப்பான போட்டியையும் எவரும் பார்த்திருக்க முடியாது.

Advertisment

இந்தியா, உலகக் கோப்பை அரையிறுதியில் இருந்து வெளியேறிய பிறகு, நம் ரசிகர்கள் மத்தியில் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆஸ்திரேலியாவோ, பாகிஸ்தானோ, வங்கதேசமோ இறுதிப் போட்டிக்கு வந்திருந்தால் நிச்சயம் இவர்கள் ஜெயிக்கக் கூடாது என்பதற்காக கூட போட்டியை பார்த்திருப்பார்கள்.

ஆனால், இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதுகிறது என்ற உடனேயே. சாம்பாரிலும், ரசத்திலும் இன்ட்ரெஸ்ட் இல்லப்பா என சைலன்ட் மோடில் இருந்தனர். நியூசிலாந்து நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை இங்கிலாந்து போராடி துரத்திக் கொண்டிருக்க, அப்போது தான் ரசிகர்களுக்கு இறுதிப் போட்டியை பார்க்கும் ஆவலே வந்தது. பரபரப்பான கடைசி ஓவரில், 241 ரன்கள் எடுத்து இங்கிலாந்து டிரா செய்தது.

கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஸ்டார்ட் ஆகும் பவரு? – மனோஜ் திவாரி நக்கல்ஸ்

பிறகு கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில், முதலில் ஆடிய இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, சேஸிங் செய்த நியூசிலாந்தும் 15 ரன்கள் எடுத்ததால், இந்தப் போட்டியில் அதிகம் பவுண்டரிகள் அடிக்கப்பட்டதன் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், 84 ரன்கள் அடித்து கடைசி வரை போராடினார். தொடர்ந்து சூப்பர் ஓவரில் இங்கிலாந்து சார்பில் அவர்தான் களமிறங்கினார்.

publive-image England’s Ben Stokes stands on the field after the presentation after winning the Cricket World Cup final match between England and New Zealand at Lord’s cricket ground in London on July 14, 2019. (AP Photo/Matt Dunham)

இந்நிலையில், சூப்பர் ஓவருக்கு முன்பாக பென் ஸ்டோக்ஸ் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து, 'Morgan's Men: The Inside Story of England's Rise from Cricket World Cup Humiliation to Glory' என்னும் ஆங்கிலப் புத்தகத்தில் சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில்,"2 மணி நேரம் 27 நிமிடங்கள் விளையாடிய ஸ்டோக்ஸின் உடல் முழுக்க அழுக்கு. வியர்வை. ஸ்டோக்ஸ் என்ன செய்தார்? அவர் இங்கிலாந்து டிரஸ்ஸிங் ரூமின் பின்புறம், சிகரெட்டைபுகைத்து, சில நிமிடங்களை தனிமையில் கழித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டியில் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார். அதுமட்டுமின்றி, இங்கிலாந்து மக்களின் மனதில் ஹீரோவாகவும் குடிபுகுந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Ben Stokes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment