pro-kabaddi-league 2023: 10-வது புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியஸ் மற்றும் உ.பி யோத்தாஸ் இடையே திங்கள்கிழமை (18.12.2023) நடைபெற்ற போட்டி வெற்றி தோல்வி இன்றி டையில் முடிந்தது. மற்றொரு போட்டியில், புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் ஆடி வருகின்றன.
10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு வளாக இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் மோத உள்ளன.
தற்போது வரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன் மற்றும் யு மும்பா ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன.
டையில் முடிந்த பெங்கால் வாரியர்ஸ் - உ.பி. யோத்தாஸ் போட்டி
10-வது புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியஸ் மற்றும் உ.பி யோத்தாஸ் இடையேயான போட்டி புனேவில் உள்ள பலேவாடி ஸ்போர்ட்ஸ் காம்ளக்ஸில் உள்ள பேட்மிண்டன் ஹாலில் நடைபெற்றது.
இந்த போட்டியில், இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைக்க் குவித்து வந்தன. இறுதியில் ஆட்ட நேர முடிவில், பெங்கால் வாரியஸ் மற்றும் உ.பி. யோத்தாஸ் அணிகள் தலா 37 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்ததால், இந்த ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி டையில் முடிந்தது.
தபாங் டெல்லியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி
10-வது புரோ கபடி லீக் தொடரில், புனேவில் உள்ள பலேவாடி ஸ்போர்ட்ஸ் காம்ளக்ஸில் உள்ள பேட்மிண்டன் ஹாலில் இன்று (18.12.2023) நடைபெற்ற மற்றொரு போட்டியில், தபாங் டெல்லியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி பெற்றது.
இறுதியில், ஆட்டநேர முடிவில், புனேரி பால்டன் அணி 30 புள்ளிகளும் தபாங் டெல்லி 23 புள்ளிகளும் எடுத்திருந்தன. இதன் மூலம், புனேரி பால்டன் அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் தபாங் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.