11-வது புரோ கபடி லீக் தொடரில் இன்றைய ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி உள் விளையாட்டு அரங்கத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில், பெங்காலை அணியை வீழ்த்தி ஜெய்பூர் வெற்றி பெற்றது.
ஐதராபாத்தில் 11-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் 18-ம் தேதி தொடங்கியது. நடப்பு புரோ கபடி லீகில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 12 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.
புரோ கபடி போட்டியில், லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். அதே நேரத்தில், லீக் சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
புரோ கபடி போட்டியில் லீக் சுற்று முடிவில், 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதியில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டியில் மோதி சாம்பியன் கோப்பையை வெல்லும்.
இந்நிலையில்,11-வது புரோ கபடி லீக் தொடரில் இன்றைய ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இன்று (அக்டோபர் 20) ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி உள் விளையாட்டு அரங்கத்தில் மோதியது.
இந்த ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இறுதியில் இந்த ஆட்டத்தில் 39-34 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றது.
பெங்கால் வாரியர்ஸ் அணியின் முக்கிய வீரர்களாக மணீந்தர் சிங் மற்றும் பாசில் ஆற்றாசலி உள்ளனர். ஜெய்ப்பூரின் முக்கிய வீரராக அர்ஜுன் தேஷ்வால் உள்ளார்.
இரண்டாம் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் பெங்களூர் புல்ஸ் மோதுகின்றனர், முக்கிய வீரர்கள் நீரஜ் குமார் மற்றும் பர்தீப் நர்வால். போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-இல் நேரலை செய்யப்படும்.
அதே போல, ,11-வது புரோ கபடி லீக் தொடரில் இரண்டாவது ஆட்டமாக, குஜராத் ஜெயன்ட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று (அக்டோபர் 20) இரவு 9 மணிக்கு மணிக்கு, ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி உள் விளையாட்டு அரங்கத்தில் மோதுகின்றன.
இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி நேரலை ஒளிபரப்பு செய்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“