புரோ கபடி லீக் : தபாங் டெல்லி, புனேரி பால்டன் அணிகள் வெற்றி

புரோ கபடியில் இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தபாங் டெல்லி அணிகளும், 9 மணிக்கு நடக்கும் ற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.

புரோ கபடியில் இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தபாங் டெல்லி அணிகளும், 9 மணிக்கு நடக்கும் ற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.

author-image
WebDesk
New Update
Bengaluru Bulls vs Dabang Delhi KC and Puneri Paltan vs U Mumba form guide  PKL 2023 updates in tamil

புரோ கபடி லீக் 2023: பெங்களூரு புல்ஸ் - தபாங் டெல்லி | புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் இன்று மோதல்

Pro-kabaddi-league: 10-வது புரோ கபடி லீக் தொடர் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

Advertisment

நேற்றைய போட்டி முடிவுகள்

இந்த தொடரில் நேற்று (வியாழக்கிழமை) 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரவு 7 மணிக்கு நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் கடுமையாக மோதிய இந்த ஆட்டத்தில் இறுதியில் இரண்டு அணியும் சமமாக 28 புள்ளிகளைப் பெற்றதால் போட்டி டிராவில் முடிந்தது. 

தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் பலம் பொருந்திய மற்றும் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த  குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை 33-30 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது. 

Advertisment
Advertisements

இன்றைய போட்டி 

இந்நிலையில், இந்த தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் பெங்களுருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 38-31 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் நவீன்குமார் 13 புள்ளிகளும், பெங்களூர் அணி தரப்பில் பரத் 12 புள்ளிகளும் எடுத்தனர்.

தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு இதே விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய  மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோதியது விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 43-32 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் சார்பில் மொஹின்ட் கோயட் 12 புள்ளிகளும், மும்பா அணி சார்பில் விஸ்வநாத் 6 புள்ளிகளும் பெற்றனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: