Advertisment

புரோ கபடி லீக் : பெங்களூரு அணியை சாய்த்தது புனேரி... டெல்லி அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர் முதலிடம்

புரோ கபடியில் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - புனேரி பல்டன் அணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
Bengaluru Bulls vs Puneri Paltan and Dabang Delhi KC vs Jaipur Pink Panthers PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023 -24: பெங்களூரு புல்ஸ் vs புனேரி பல்டன்; தபாங் டெல்லி கே.சி vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறது. அதில், டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - புனேரி பல்டன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 40-31 என்ற புள்ளி கணக்கில்  புனேரி பல்டன் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், புனேரி அணி 18 போட்டிகளில் 13 வெற்றியுடன் 76 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திலும், 19 ஆட்டத்தில் 7 வெற்றிகளுடன் 48 புள்ளிகள் பெற்று பெங்களூர் அணி 7-வது இடத்திலும் உள்ளது.

இதனையடுத்து, இரவு 9 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது. பரபரப்பான இந்த போட்டியில், 27-22 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 19 போட்டிகளில் 13 வெற்றிகள் பெற்றுள்ள ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 77 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 20 போட்டிகளில் 11 வெற்றி பெற்றுள்ள தபாங் டெல்லி அணி 69 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment