Advertisment

பெங்களூரு புல்சை வீழ்த்திய நடப்பு சாம்பியன்... புனேரி பல்டனுக்கு 3-வது வெற்றி!

புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் - புனேரி பல்டன் அணிகள் இடையே ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை (அக்.25) இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில், புனேரி பல்டன் அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bengaluru Bulls vs Puneri Paltan in match 16 of Pro Kabaddi Season 11 tamil

புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ் vs புனேரி பல்டன் மோதல்

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். 

Advertisment

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் - புனேரி பல்டன் அணிகள் இடையேயான போட்டி ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை (அக்.25) இரவு 9 மணிக்கு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்டன் அணி அபார வெற்ற்றி பெற்றது.   

பெங்களூரு புல்ஸ் - புனேரி பல்டன் அணிகள் இடையேயான இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே புனேரி பல்டன் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்ட நேர முடிவில், பெங்களூரு புல்ஸ் அணி 22 புள்ளிகளையும், புனேரி பல்டன் 36 புள்ளிகளையும் எடுத்திருந்தன. இதன் மூலம், புனேரி பல்டன் அணி 14 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்க்ளூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த இரு அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டன. பெங்களூரு புல்ஸ் உ.பி யோதாஸிடமும், புனேரி பல்டன் தமிழ் தலைவாஸ் அணியிடமும் தோல்வியுற்றன. அந்தத் தோல்வியில் இருந்து மீள இன்றைய ஆட்டத்தில் வெற்றி அவசியமாக இருந்தது. இரு அணிகளும் மோதியதில், பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்டன் அணி வெற்றி பெற்றது.

நேருக்கு நேர் 

புரோ கபடி லீக் வரலாற்றில் பெங்களூரு புல்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் 18 முறை மோதியுள்ளன. இதில் புனேரி பல்டன் 11 முறையும், பெங்களூரு புல்ஸ் 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், புனேரி பல்டன் அணி, பெங்களூரு அணிக்கு எதிராக 12வது முறை வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகள் கடைசியாக மோதிய ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை  புனேரி பல்டன் 40-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment