Advertisment

வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? குஜராத் ஜெயண்ட்சுடன் இன்று மோதல்

புரோ கபடியில் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.

author-image
WebDesk
New Update
Bengaluru Bulls vs U Mumba and Gujarat Giants vs Tamil Thalaivas PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023 -24: பெங்களூரு புல்ஸ் - யு மும்பா; குஜராத் ஜெயண்ட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன. இதையடுத்து, இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.

குஜராத் ஜெயண்ட்ஸ் vs தமிழ் தலைவாஸ்

நடப்பு புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 17 போட்டிகளில் 7ல் வெற்றி, 10ல் தோல்வி என 40 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப்க்கு முன்னேற முதல் 6 இடங்களுக்குள் வர வேண்டும். அதற்கு தமிழ் தலைவாஸ் அணி மீதமுள்ள 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். 

தமிழ் தலைவாஸ் அணி அதன் முந்தைய 3 ஆட்டங்களில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு புல்ஸ் அணியை 28-45 என்ற கணக்கிலும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 29-54 என்ற கணக்கிலும் வீழ்த்தி அசத்தியது. இதேபோல், யு மும்பா அணியை 34 - 50 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியை ருசித்தது. 

ஆனால், கடைசியாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 27 - 42 என 15 புள்ளிகள் வித்தியாசத்தில் பரிதமாக தோல்வியடைந்தது. அந்த தோல்வியில் இருந்து மீளவும், பிளே-ஆஃப்க்கு முன்னேறவும் தமிழ் தலைவாஸ் கடுமையாக போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment