Bengaluru Bulls won Pro Kabaddi season 6 : ப்ரோ கபடியின் இறுதி ஆட்டம் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு புல்ஸ் அணி 38-33 என்ற புள்ளிகளில் குஜராத் அணியை பின்னுக்குத் தள்ளி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
Bengaluru Bulls won Pro Kabaddi season 6 - பவன் ஷெராவத் அதிரடி
ஆறாவது சீசன் ப்ரோ கபடி லீக்கின் இறுதி போட்டி நேற்று பெங்களூருக்கும் குஜராத்திற்கும் இடையே நடைபெற்றது. இறுதி போட்டிக்கான தகுதிச் சுற்றில் ஏற்கனவே குஜராத்தினை தோல்வி அடைய செய்தது பெங்களூரு அணி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது தகுதிச் சுற்றில் உத்தரப்பிரதேச அணியை வென்று, இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது குஜராத் அணி.
டாஸ் வென்ற பெங்களூரு அணி தான் முதல் புள்ளியை பெற்றது. விளையாட்டின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்தாலும், முதல் பாதியில் பெங்களூரு அணியை ஆல்-அவுட் செய்தது குஜராத் அணி. முதல் பாதியில் குஜராத் அணி 16-9 என்ற நிலையில் முன்னணியில் இருந்தது. ஆனால் பவன் ஷெராவத் அடுத்தடுத்து அணிக்கு புள்ளிகளை பெற்றுத் தர, இரண்டாவது பாதியில் குஜராத் அணி இரண்டு முறை ஆல் அவுட் ஆனது.
பவன் ஷெராவத் 25 முறை ரெய்ட் சென்று 20 புள்ளிகளையும், இரண்டு போனஸ் புள்ளிகளையும் தன்னுடைய பெங்களூரு அணிக்கு பெற்றுக் கொடுத்தார். இரண்டாவது முறையாக தன்னுடைய கனவு தகர்ந்து இல்லம் திரும்பினர் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயிண்ட்ஸ் அணியினர்.