/indian-express-tamil/media/media_files/2025/06/07/CBd1fQR8Aud4wkv5zaqz.jpg)
பெங்களூரு துயர சம்பவம்: லைகா கோவை கிங்ஸ் கேப்டன் ஷாரூக் வேதனை
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பாணியில், தமிழகத்தில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது 9-வது சீசனாக டி.என்.பி.எல். போட்டியில், லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற போட்டிகள் வேறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாரூக் மற்றும் அணியின் இயக்குனர் ஹாரி வகீசன், தலைமை பயிற்சியாளர் ஹரீஷ் மற்றும் அணியின் தலைவர் ஹரி மனோகர் உட்பட லைகா கோவை கிங்ஸ் அணி வீரர்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களுடன் செல்பி, கலாட்டா போட்டிகள் என கலந்து கொண்ட லைகா கிங்ஸ் அணியினர் மேடையில் ரேம்ப் வாக் நடந்து அசத்தினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பி.எல். குஜராத் டைட்டன் அணியின் வீர்ரும், லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டனுமான ஷாரூக் கூறியதாவது; தற்போது நடைபெற்று வரும் டி.என்.பி.எல்.சீசனில் இனி வரும் போட்டிகளில் சிறந்து செயல்பட உள்ளதாகாவும், அறிமுக வீரர்களை அதிகமாக கொண்ட அணியாக விளையாடுவதில் அதிக பலமே தவிர எந்த சிரமும் இல்லை எனவும் கூறினார்.
ஐ.பி.எல்.வெற்றி கொண்டாட்டத்தில் பெங்களூருவில் ஏற்பட்ட துயர சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறிய அவர், கிரிக்கெட்டை ரசிக்கும் ரசிகர்கள் சிறிது நிதானத்தையும் கடை பிடிக்க வேண்டும் எனவும் இதுபோன்ற சம்பவங்கள் இனி மேலும் தொடராமல் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.