ஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்!

அவ்வப்போது அவரது கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளி, பலரது மனங்களையும் வென்றுவிட்டது

ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் 20 ஆண்டுகள் கழித்து, பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அதேசமயம், வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷியாவின் பட்டம் வெல்லும் கனவு தகர்ந்தது. உலகக் கோப்பை முடிந்த பிறகு, அரங்கேறிய சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து இங்கே பார்ப்போம்,

உலகக் கோப்பையை வென்ற பிறகு, மைதானத்தில் வாணவேடிக்கை

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ரசித்த முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ஜாகீர் கான் மற்றும் அவரது மனைவி,

பிரான்ஸ் கோப்பையை வென்ற பிறகு, வண்ணமயமான விளக்குகளாலும், வாணவேடிக்கைகளாலும் அதிர்ந்த ஈஃபில் டவர்,

அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து,

பிரெஞ்ச் ஸ்டைலில், ரசிகைகள் வெற்றியை கொண்டாடிய போது,

பிரான்ஸ் வீரர் போக்பாவுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நடனம் ஆடிய போது,

வெற்றிக்கு பிறகு பிரான்சில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டம்,

பிரெஞ்ச் ஸ்டைலில் மற்றுமொரு வெற்றி கொண்டாட்டம்,

போட்டி முடிந்த பிறகு அன்பை பரிமாறிக் கொள்ளும் பிரான்ஸ் அதிபரும், குரோஷியா அதிபர் கொலிண்டாவும்,

1998ல் பிரான்ஸ் கோப்பையை வென்ற போதும், 2018ல் பிரான்ஸ் கோப்பையை வென்ற போதும்,

குரோஷியா வீரர்களின் சோக தருணங்கள்,

தோற்றாலும், ஜெயித்தாலும் கடைசி வரை அணியை விட்டுக் கொடுக்காமல் நின்ற குரோஷியா அதிபர் கொலிண்டா.

பரிசளிப்பு நிகழ்வின் போது, அதிபர் கொலிண்டா குரோஷியா வீரர்களை கட்டியணைத்து ஆறுதல் சொன்ன விதமும், அவ்வப்போது அவரது கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளியும், பலரது மனங்களையும் வென்றுவிட்டது.

பல ஆச்சர்யங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், வெற்றிகள், தோல்விகள், கண்ணீர்த்துளிகள் என 21வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் இனிதே நிறைவுற்றது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close