2023 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். துணை கேப்டனாக டி20 போட்டியில் செயல்பட உள்ளார்.
துணை கேப்டனாக இவர் சந்திக்கும் முதல் சர்வதேச போட்டி என்பதால் இவர் எப்படி செயல்படுவார் என்ற சந்தேகத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். இந்நிலையில் under 22 இந்தியா அணிக்கு கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் காட்போல் என்ற பயிற்சியாளர் சூர்யகுமார் அதிரடியாக விளையாடுவார் என்று கூறியுள்ளார்.
மேலும் கூறிய அவர் “ நான் சுனில் கவாஸ்கர் , சச்சினை பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் கூடுதலாக சிறப்பானவர்” என்று கூறியுள்ளார். மேலும் இவரது பேட்டிங் யுக்தி தனக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நினைவுப்படுத்துவதாக கூறியுள்ளார்.

ஐசிசியின் டி 20தரவரிசையில் தற்போது இவர் முதல் இடத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பையில் பிரம்மிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது 360 டிகிரி யுக்தி, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.