Advertisment

208 கி.மீ வேகத்தில் பந்துவீசிய புவனேஸ்வர்? என்னப்பா நடக்குது, இங்கே?

Speed Gun shows Bhuvneshwar Kumar bowling a 208 kph delivery against Ireland Tamil News: அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி-20 ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை சாய்த்து அசத்திய வெக்கபந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் உலக ஒன்றையும் நிகழ்த்தி அசத்தி இருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Bhuvneshwar Kumar Bowls at 201 Kmph Delivery against Ireland 1st T20I

Ireland vs India, 1st T20I: Bhubaneswar bowling at 208 kmph Tamil News

Bhuvneshwar Kumar News in Tamil: அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில், இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனிடையே மழையின் குறுக்கீடால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த ஹாரி டெக்டர் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில், கேப்டன் ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்ந்து 109 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய இந்தியா 9.2 ஓவரை (111 ரன்கள்) இலக்கை எட்டியது. இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும், தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியில் தொடக்க வீரராக களமாடிய தீபக் ஹூடா 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை சிதறவிட்டு 47 ரன்கள் எடுத்திருந்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணி இலக்கை எளிதில் அடைய உதவினார். இதேபோல், தொடக்க வீரர் இஷான் கிஷன் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருதை யுஸ்வேந்திர சாஹல் தட்டிச் சென்றார்.

இதையும் படியுங்கள்: வேகம், கூர்மை, துல்லியம்… புவனேஸ்வர் புதிய எழுச்சி பின்னணி

அதிவேக பந்துவீச்சில் உலக சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்…

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி பந்துவீச்சாளராக வலம் வரும் புவனேஷ்வர் குமார், தனது சிறப்பான ஸ்விங் பந்துவீச்சுகளுக்கு பெயர்போனவர். ஆனால், அவருக்கு அடிக்கடி ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தவிர, 2020, 2021 ஆம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் சீசன்களிலும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி சொதப்பி இருந்தார். அவர் இரண்டு சீசன்களிலும் மொத்தமாக 6 விக்கெட்டுகளை மட்டும் தான் வீழ்த்தி இருந்தார்.

ஆனால், இந்த சீசனில் புவனேஷ்வர் குமார் தனக்கான பின்னடைவுகளை கலைந்துவிட்டு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 7.34 என்ற எக்கனாமியில் வீசிய அவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து அவருக்கு தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. இதில் அவர் தொடரின் நாயகன் விருதை வென்று அசத்தினார்.

தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆடும் லெவனில் களமாடிய புவி ஒரு விக்கெட்டை சாய்த்து அசத்தியுள்ளார். இதேபோல், உலக ஒன்றையும் நிகழ்த்தி அசத்தி இருக்கிறார்.

நேற்றைய ஆட்டத்தில் புவனேஷ்வர் குமாரின் முதல் பந்தை ஸ்டிர்லிங் எதிர்கொண்டார். ஆடுகளத்தில் குத்தி சீறிப்பாய்ந்த அந்த பந்து 201 கிமீ வேகத்தில் பந்து வீசப்பட்டது. அதையே "ஸ்பீட் கன்" Speed Gun காட்டியதால் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர் மீண்டும் அவர் வீசிய பந்து 208 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. இம்முறை "ஸ்பீட் கன்" காட்டியது தான் சரி என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி நம்பினர்.

பந்துவீச்சில் வேகம், கூர்மை, துல்லியம் என பல வடிவங்களிலும் பட்டையை கிளப்பும் புவனேஸ்வர் குமார், முதன் முறையை 208 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி மிரட்டி இருக்கிறார். இதன் மூலம் அவர் டி20 போட்டியில் போட்டியில் அதிவேகப் பந்துவீச்சை வீசிய முதல் வீரர் என்கிற பெருமையும், உலக சாதனையும் படைத்தார்.

publive-image

முன்னதாக, நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் களமிறங்கி வேகத்தாக்குதலை தொடுத்த ஜம்மு - கஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக், தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்தில் பந்துகளை வீசி அதிவேக பந்துவீச்சாளர் என்று வர்ணிக்கப்பட்டார். மேலும், 14 போட்டிகளிலும் அதிவேக பந்துவீசிய வீரருக்கான விருதுகளை வாங்கி குவித்தார். அவரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் இருந்தது.

இந்நிலையில், இளம் இந்திய வீரரின் சாதனையையும் முறியடித்து இருக்கிறார் புவனேஸ்வர் குமார். அதிவேக பந்துவீச்சில் முதன்மையானவராக இருக்கும் அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: வேகம், கூர்மை, துல்லியம்… புவனேஸ்வர் புதிய எழுச்சி பின்னணி

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket India Vs Ireland Bhuvneshwar Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment