/tamil-ie/media/media_files/uploads/2019/12/a621.jpg)
big bash league 2019 20 daniel sams worst bowling - இந்த நூற்றாண்டின் மோசமான பவுலிங்! லெக் அம்பயரை அரள வைத்த பவுலர் (வீடியோ)
ஆஸ்திரேலியாவின் பிரபல டி20 தொடரான பிக்பேஷ் லீக்-ன் ஒன்பதாவது சீசன் நேற்று (டிச.17) தொடங்கியது. சீசனின் முதல் போட்டியிலேயே, 'என்னய்யா பவுலிங் போடுறான்!!' என்று சொல்ல வைத்திருக்கிறார் டேனியல் சாம்ஸ்.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில், சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் ஆகிய அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த சிட்னி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.
பிறகு களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி வெப்பத்தை கக்கும் என்று பார்த்தால், 19.2 ஓவர்களில் 143 ரன்களுடன் பொத்துனாப்புல படுத்துக் கொண்டது. இதனால், 29 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் வெற்றிப் பெற்றது.
இப்போட்டியில், சிட்னி வீரர் டேனியல் சாம்ஸ், முதல் ஓவரில் ஸ்லோ பந்து ஒன்றை வீச முயற்சி செய்தார். பந்தும் அருமையாக ரிலீஸ் ஆகிச் சென்றது. ஆனால், பேட்ஸ்மேனுக்கு அல்ல; ஸ்கொயர் லெக் அம்பயருக்கு!.
Umm, what? Daniel Sams almost bowled this ball out of the circle completely ????@KFCAustralia | #BBL09pic.twitter.com/In0fNZubTf
— KFC Big Bash League (@BBL) December 17, 2019
அப்படியொரு அபாரமான பந்து வீசிய டேனியல் தான் சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்களின் பழைய சோத்துக்கு ஊறுகாயாக உருமாறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.