Advertisment

ஷாக் முடிவு எடுத்த தென் ஆப்பிரிக்கா: இரு தரப்பு கிரிக்கெட் போட்டிக்கு ஆபத்து

With South Africa’s withdrawal of ODI series with Australia due to their new T20 franchise league, the economics of cricket has spoken Tamil News: கிரிக்கெட்டை சுற்றி நடைபெறும் வியாபாரங்கள் டெஸ்ட் மற்றும் "அர்த்தமற்ற" இருதரப்புத் தொடர்களை ஆதரிக்காது என்றும் நம்மிடம் பேசிய வணிக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
 Bilateral ODI series is at risk as SA withdraws against Australia 

South Africa have withdrwan from ODI series vs Australia scheduled for January 2023. (FILE)

Cricket news in tamil: தென்ஆப்பிரிக்கா அதன் புதிய டி20 ஃபிரான்சைஸ் லீக்குடன் மோதவுள்ளதால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளது. அந்த அணியின் இந்த திடீர் விலகல் இரு நாடுகளுக்கு இடையேயான (இருதரப்பு) கிரிக்கெட் தொடர்கள், குறிப்பாக ஒருநாள் போட்டிகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்டு வருவதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, காளான்கள் போல் பலுகி பெருகி உள்ள டி-20 தொடர்களால் (டி-20 ஃபிரான்சைஸ் லீக்) சர்வதேச அட்டவணையில் குழப்பம் நீடித்து வருகிறது.

Advertisment

பணப்புழக்கம் அதிகரித்து வரும் இந்த டி-20 தொடர்களால் தென்ஆப்பிரிக்கா இந்த முடிவை எட்டியிருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால், அந்த அணியின் இந்த திடீர் விலகல் அணிக்கு சில அபாயங்களை கொண்டு வருகிறது. அதில் குறிப்பிடும் படியான ஒன்றாக அடுத்தாண்டு நடைபெற உள்ள 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அந்த அணி விளையாட மறுத்துள்ளதால், அந்த அணி புள்ளிகளை இழக்க நேரிடும். இது உலகக் கோப்பைக்கான நேரடி தகுதியை கேள்விக்குள்ளாக்கும்.

கிரிக்கெட்டை சுற்றி நடைபெறும் வியாபாரங்கள் டெஸ்ட் மற்றும் "அர்த்தமற்ற" இருதரப்புத் தொடர்களை ஆதரிக்காது என்றும் நம்மிடம் பேசிய வணிக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். முன்னதாக இந்த இதழுக்கு ஸ்டார் மற்றும் டிஸ்னி இந்தியாவின் முன்னாள் தலைவரான உதய் ஷங்கர் அளித்த பேட்டியில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மார்க்கெட் இல்லை என்றும், ஒளிபரப்பாளர்களில் பெரும்பாலோர்தான் அதை நடத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

 Uday Shankar
ஸ்டார் மற்றும் டிஸ்னி இந்தியாவின் முன்னாள் தலைவரார் உதய் ஷங்கர் / Uday Shankar, the former chief of Star & Disney India. (FILE)

டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்ல, இருதரப்பு ஒருநாள் தொடருக்கும் ஆபத்து உள்ளது. உண்மையில், சர்வதேச அட்டவணை ஏற்கனவே சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குறைந்த மற்றும் குறைவான ஒருநாள் போட்டிகளே விளையாடப்படுகின்றன. இதனால், அடிக்கடி அட்டவணையில் அதிக மாற்றமும், மறுசீரமைப்பும் தெரிகிறது.

"நாம் கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டுமா இல்லையா? கெர்ரி பாக்கர் செய்ததைச் செய்யாவிட்டால், கிரிக்கெட்டுக்கு என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஒரு வருடத்தில் 13 டெஸ்ட் போட்டிகள் தேவையா – 65 நாட்கள்! உங்களுக்கு எத்தனை விடுமுறைகள் கிடைக்கும்? 20 நாட்கள்? எல்லா டெஸ்ட்டுகளையும் பார்க்க இது போதுமா?” என்று 2018 மற்றும் 2022 க்கு இடையில் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான ஊடக உரிமைகளைப் பெற, தனது நெட்வொர்க் 16,000 கோடியை ஈட்டிய சில நாட்களுக்குப் பிறகு, 2017 இல் ஷங்கர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். இப்போது, ஐபிஎல் தொடருக்கான ஊடக உரிமை 43,000 கோடி என்கிற புதிய உச்சத்தை அடைந்துளளது.

"வியாபாரம் விளையாட்டை இயக்குவதில்லை. விளையாட்டின் புகழ் தான்வியாபாரத்தை இயக்குகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சில கோடைகால டெஸ்ட் போட்டிகளைத் தவிர, நீங்கள் முழு மைதானத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இன்றைய உலகில், ஐந்து நாட்கள் நடக்கும் போட்டியைப் பார்க்க, டிவி அல்லது மைதானத்தில் யார் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்? டி20, ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும், மக்கள் ஒரு மணிநேரம் அதைப் பார்க்கச் செலவிடுகிறார்கள் என்று எங்கள் சொந்த தரவு தெரிவிக்கிறது. இது BARC தரவு. டெஸ்ட் கிரிக்கெட் வியாபாரத்திற்கு ஒத்து வரத்து. ”என்று ஷங்கர் கூறியுள்ளார்.

மேலும், அவர் ரசிகர்கள் விரும்புவதைப் பொறுத்து கிரிக்கெட்டின் வியாபரம் எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதையும் அவர் பேசியுள்ளார். “ரசிகர்கள் டி20 வடிவத்தை விரும்புகிறார்கள் ஒரு ஒளிபரப்பாளரின் முன்னோக்கைத் தவறாகப் புரிந்துகொள்வது எளிது. ஏனென்றால் நாங்கள் பணத்திற்காக அதில் உள்ள தோழர்களாகத் தெரிகிறது. இது உண்மைதான். ஆனால், ரசிகர்கள் எதையாவது விரும்பும்போதுதான் நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள். இந்த மொத்த மாதிரியும் எப்போதும் விலை உயர்ந்த கிரிக்கெட் உரிமைகளை வாங்குவது நிலையானது அல்ல. உலகிலேயே இங்கு விளையாட்டு நுகர்வு மிகக் குறைவு. அது மாறும் வரை, விளையாட்டு வணிகம் கடினமாக இருக்கும்." என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டன. அது ஐபிஎல் எனும் பிராண்ட் வளர்ச்சியின் ஆரம்பக் குறிகாட்டியாக இருந்தது. இத்தொடர் மூலம் பிசிசிஐ 1.7 பில்லியன் டாலர்கள் சம்பாதித்தது. லக்னோ அணி அடிப்படை விலையில் இருந்து 250 சதவீதம் அதிகமாகச் சென்று விற்பனை செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐசிசி போட்டிகள் தொடரும், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வைத்து டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சித்துள்ளது. ஆனால் அது போதுமான அளவிற்கு நிரூபிக்கும் வண்ணம் இல்லை.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket South Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment