கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் 2023 செஸ் போட்டிகள் குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் டி, இயான் நெபோம்னியாச்சி, ஃபேபியானோ கருவானா, ஜான்-கிர்சிஸ்டோஃப் டுடா மற்றும் ரிச்சர்ட் ராப்போர்ட், விஸ்வநாதன் ஆனந்த் போன்ற முன்னணி வீரர்கள் களமாடி வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் குகேஷ் தனது ரோல்மாடலான விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தார். இந்த வீரர்களும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
“இது மிக முக்கியமான வெற்றி. இதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் (முடிவில்). நான் சிறந்தவன் என்று நினைத்தேன், ஆனால் அவர் மிக எளிதாக சமன் செய்தார். பின்னர் அவர் பின்தங்கிய தரவரிசையில் தவறு செய்தார். அதன் பிறகு, நிலை மிகவும் சிக்கலானது. அங்கிருந்து விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது." என்று குகேஷ் டி கூறினார்.
ரேபிட் செக்மென்ட்டில் குகேஷ் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் இருவரும் 18 புள்ளிகளில் 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் சமநிலையுடன் உள்ளனர். நெபோம்னியாச்சி மற்றும் கருவானா ஆகியோர் தலா 12 புள்ளிகளுடன் முன்னிலை உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil