/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-04T121619.258-1.jpg)
Ravichandran Ashwin
IND vs AUS Nagpur Test, Ravichandran Ashwin Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் (பார்டர் கவாஸ்கர் டிராபி), 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் வரும் 9-ம் தேதி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்தத் தொடருக்கு முன்னதாக தங்கள் கருத்துகளையும் பகுப்பாய்வுகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல், ரசிகர்களும் இந்த தொடர்பான கருத்துக்களையும், தங்களின் ஆடும் லெவன் வீரர்களின் பட்டியலையும் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இணையத்தில் வார்த்தைப்போரும் மூண்டுள்ளது.
இந்த தொடருக்கான டெஸ்ட் அணியில் பல முன்னணி வீரர்கள் இருந்தாலும், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கவனம் ஈர்க்கும் வீரராக உள்ளார். இந்திய சுழல் மன்னனாக வலம் வரும் அவர் 88 போட்டிகளில் 449 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டியுள்ளார். குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய 18 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் 88 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எடுத்தது தான் இன்று வரை அதிகபட்சமாக உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-04T121637.826.jpg)
அஸ்வின் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பதாலும், தொடர் இந்தியாவின் சொந்த மண்ணில் நடப்பதாலும் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் வலைப்பயிற்சியில் சுழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இதனால் தான் என்னவோ, அஸ்வினைப் போன்ற அதே ஆக்சனில் வீசும் குஜராத் இளம் வீரர் மகேஷ் பித்தியாவை அழைத்து, வலைப்பயிற்சியின் போது ஆஸ்திரேலிய வீரரர்களுக்கு பந்துவீச செய்துள்ளது. ஆனால், களத்தில் அஸ்வின் அடுத்தடுத்து என்ன பந்துவீச்சுவார் என்பது அவருக்கே தெரியாது.
இந்தியாவின் ஏஸ் ஸ்பின்னராக இருந்து வரும் அவர் ஆஸ்திரேலிய மண்ணிலும், இந்தியாவிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துள்ளார். அவ்வகையில், இம்முறை நடக்கும் தொடரில், அவர் விரிக்கும் அந்த "சுழல் வலையில்" சிக்க வாய்ப்புள்ள 3 ஆஸ்திரேலிய வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
- உஸ்மான் கவாஜா
ஆஸ்திரேலிய தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா 2018ல் அஷ்வினுக்கு எதிராக விளையாடிய ஆட்டங்களில் அவருக்கு எதிராக போராடியுள்ளார். அஸ்வினின் பந்துவீச்சில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு முறை ஆட்டமிழந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-06T162050.643.jpg)
இடது கை பேட்ஸ்மேனான கவாஜா சுழலுக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர் தான். ஆனாலும் அஸ்வின் விரிக்கும் சுழல் வலையில் வந்து சிக்கிக்கொள்ளும் ஒரு வீரராக இருக்கிறார். கடந்த ஆண்டு ஆசிய மைதானங்களில் ஆஸ்திரேலியா விளையாடியபோது அவர் மிகவும் சிறப்பான பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார். இருப்பினும், அவர் இன்னும் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. எனவே இந்த சூழ்நிலையில் அவர் எப்படி விளையாடுவார் என்பதையும், அஸ்வினை அவர் எப்படி சமாளிப்பார் என்பதனையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2 டிராவிஸ் ஹெட்
கடந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர்களில் ஒருவரான டிராவிஸ் ஹெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது ஃபார்ம் அவரது அணிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தியாவில் ஹெட்டின் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். ஆஸ்திரேலியாவில் அவரது புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருந்தாலும், துணைக் கண்டத்தில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளில் 100 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-06T162112.365.jpg)
இடது கை பேட்ஸ்மேனான அவர் கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவில் அஸ்வினை எதிர்கொண்டுள்ளார். அவருக்கு எதிராக 31 ரன்கள் எடுத்து ஒருமுறை அவுட் ஆனார். இந்திய களத்தில் இரு அணிகளும் சந்திக்கும் போது இது ஒரு வித்தியாசமான விளையாட்டாக இருக்கும் என்று சொன்னால் மிகையாகாது.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது டிராவிஸ் ஹெட்டுக்கு இது ஒரு பெரிய சோதனையாக இருக்கும். மேலும் அவரது ஆட்டம் மற்றும் அவுட்புட் ஆஸ்திரேலியாவின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். இருப்பினும், இடது கை வீரர்களுக்கு எதிராக அஸ்வினின் ஆதிக்கம், குறிப்பாக உள்நாட்டில், மற்றும் ஹெட் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே வெற்றி பெறாதது போன்ற தரவுகள் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
டேவிட் வார்னர்
டேவிட் வார்னர் 2012 ஆம் ஆண்டு தொடங்கி அஸ்வினை பலமுறை எதிர்கொண்டுள்ளார். அவரை எதிர்கொள்வதை வார்னர் ரசிக்கவில்லை. அஸ்வின் 10 சந்தர்ப்பங்களில் வார்னரை ஆட்டமிழக்க செய்துள்ளார். அஸ்வினுக்கு எதிராக 18.2 சராசரியில் 182 ரன்கள் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. இந்தத் தொடருக்குச் செல்லும் வார்னர் சிறந்த ஃபார்மில் இல்லை.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-06T162128.902.jpg)
எட்டு ஆட்டங்களில் 24.25 சராசரியுடன் மூன்று அரை சதங்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்தியாவில் சிறந்த சாதனைகளை அவர் கொண்டிருக்கவில்லை. அவர் ஏற்கனவே அஸ்வினின் சுழல் வலையில் அடிக்கடி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராகவும், இந்த தொடரின் முடிவில் அந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் நாம் அடித்து சொல்லாம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.