scorecardresearch

2000 ரன்கள், 4வது இந்திய வீரர்… ஆஸி,.-க்கு எதிராக மற்றொரு சாதனையை நெருங்கும் கோலி!

கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மற்றொரு சாதனையை நெருங்கியுள்ளார். அவர் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 2000 ரன்களை சேர்க்க அவருக்கு 318 ரன்கள் தேவை.

Border - Gavaskar trophy 2023: Kohli closer to another record against Aus Tamil News
IND vs AUS: Virat Kohli inches closer to another record against Australia in Border – Gavaskar trophy 2023

Border – Gavaskar Trophy 2023, Virat Kohli Tamil News: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று (வியாழக்கிழமை) முதல் நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வுசெய்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் களமாடியுள்ளனர்.

ஆஸி,.-க்கு எதிராக மற்றொரு சாதனையை நெருங்கும் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய அணி என்றால் அல்வா சாப்பிடுவது போல்தான் இருக்கும். அவர்கள் ஒருபுறம், இவர் மறுபுறம் ரன்களை சேர்த்துக்கொண்டே இருப்பார். சொந்த மண்ணிலும் சரி, ஆஸ்திரேலியாவிலும் சரி அவர் அந்த அணிக்கு எதிராக சிறப்பான பதிவுகளை வைத்துள்ளார். அவர் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். அதில் 48 சராசரி மற்றும் 52 ஸ்ட்ரைக் ரேட்டில் 1682 ரன்களைக் குவித்துள்ளார்.

இதில் கோலி விளாசியுள்ள 7 சதங்களும், 5 அரைசதங்களும் அடங்கும். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரின் அதிகபட்ச ஸ்கோர் 169 ஆக உள்ளது. இந்த தொடரில் அதைவிட அதிகம் குவிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்நிலையில், கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மற்றொரு சாதனையை நெருங்கியுள்ளார். அவர் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 2000 ரன்களை சேர்க்க அவருக்கு 318 ரன்கள் தேவை. அவர் 318 ரன்களை எடுக்கும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் டிராபியில் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த நான்காவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 34 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் உட்பட 56.24 சராசரியுடன் 3262 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபியில் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மற்ற இரண்டு வீரர்களாக விவிஎஸ் லட்சுமண் (29 டெஸ்டில் 2434 ரன்கள்) மற்றும் ராகுல் டிராவிட் (32 டெஸ்டில் 2143 ரன்கள்) உள்ளனர்.

கோலியைத் தவிர, 20 டெஸ்டில் 54.08 என்ற சராசரியில் 1893 ரன்களைக் குவித்துள்ள புஜாரா, இந்த சாதனையை நெருங்கும் மற்றொரு இந்திய வீரராக உள்ளார். அவர் பார்டர் கவாஸ்கர் டிராபியில் 37 இன்னிங்ஸ்களில், 54 சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 42ல் 1893 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் அவர் 5 சதம் மற்றும் 10 அரைசதங்களை விளாசியுள்ளார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 204 ரன்கள் ஆகும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Border gavaskar trophy 2023 kohli closer to another record against aus tamil news

Best of Express