Virat Kohli – Cheteshwar Pujara Tamil News: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் வியாழக்கிழமை (பிப்ரவரி 9-ம் தேதி) தொடங்குகிறது.
கோலி vs புஜாரா… ஆஸி.,க்கு எதிராக பெஸ்ட் பிளேயர் யார்?
தனது தங்கத் தரத்திற்கு எதிராக ஏறக்குறைய மூன்று வருட தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு, விராட் கோலி தனது சிறந்த ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். அவரின் தற்போதையை நிலையைப் பார்க்கும்போது, ரன் வேட்டை நடத்த வெறித்தமான வெயிட்டிங்கில் இருப்பதுபோல் தெரிகிறது. தவிர, நாக்பூரில் நடவிருக்கும் போட்டிக்காக கடந்த சில நாட்களாக சிறப்பான வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
எனவே, பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி மீண்டும், எப்போதும் போல், பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருப்பார் என எதிர்பார்க்கலாம். ஆடுகளங்கள் ரேங்க் டர்னர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாதன் லயன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் சுழல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள கோலி தனது சிறந்தவராக இருக்க வேண்டும். அவரும் பட்டை கிளப்புவார் என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியில் 2 பேட்ஸ்மேன்கள் எப்போதும் நல்ல நிலையில் இருந்துள்ளனர். அந்த இருவர் கோலி மற்றும் புஜாரா ஆவார். தற்போது இருவரின் புள்ளி விவரங்களையும் பார்க்கலாம். அதில் யார் பேஸ்ட்? என்பதை பின்னர் தெரிந்து கொள்ளலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலியின் டெஸ்ட் ரெக்கார்ட்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கோலி எப்போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணிக்கு எதிராக விளையாடிய 36 இன்னிங்ஸ்களில், விராட் 48 சராசரி மற்றும் 52 ஸ்ட்ரைக் ரேட்டில் 1682 ரன்களைக் குவித்துள்ளார்.
இன்னிங்ஸ்: 36
ரன்கள்: 1682
சராசரி: 48
ஸ்ட்ரைக் ரேட்: 52
50கள்: 5
100கள்: 7
அதிகபட்ச ரன்: 169
புஜாரா
மறுபுறம், புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 37 இன்னிங்ஸ்களில், 54 சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 42ல் 1893 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் அவர் தனது 5 சதம் மற்றும் 10 அரைசதங்களை விளாசியுள்ளார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் 204 ரன்கள் ஆகும்.
இதையும் படியுங்க: ரெக்கார்ட் சொல்லுது… இப்பவும் இவர்தான் பெஸ்ட்: ஆஸி.-க்கு இந்த முறையும் ‘தண்ணி’ காட்டுவாரா புஜாரா?
பார்டர் – கவாஸ்கர் டிராபி: முக்கிய சாதனைகள்
அதிக ரன்கள்
சச்சின் டெண்டுல்கர்: 3262
ரிக்கி பாண்டிங்: 2555
வி.வி.எஸ்.லக்ஷ்மன்: 2434
இதையும் படியுங்க: ரெக்கார்ட் சொல்லுது… இப்பவும் இவர்தான் பெஸ்ட்: ஆஸி.-க்கு இந்த முறையும் ‘தண்ணி’ காட்டுவாரா புஜாரா?
அதிகபட்ச ரன்கள்
மைக்கேல் கிளார்க்: 329*
விவிஎஸ் லட்சுமணன்: 281
ரிக்கி பாண்டிங்: 257
அதிக சதம்
சச்சின் டெண்டுல்கர்: 9
ஸ்டீவ் ஸ்மித்: 9
ரிக்கி பாண்டிங்: 8
அதிக அரைசதம்
சச்சின் டெண்டுல்கர்: 25
ரிக்கி பாண்டிங்: 20
விவிஎஸ் லட்சுமணன்: 18
ஒரு தொடரில் அதிக ரன்கள்
ஸ்டீவ் ஸ்மித்: 2014/15ல் 769
ரிக்கி பாண்டிங்: 2003/4ல் 706
விராட் கோலி: 2014/15ல் 692
இதையும் படியுங்க: ரெக்கார்ட் சொல்லுது… இப்பவும் இவர்தான் பெஸ்ட்: ஆஸி.-க்கு இந்த முறையும் ‘தண்ணி’ காட்டுவாரா புஜாரா?
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil